News Update :
Home » » ஆசியாக் கண்டத்தில் இலங்கை மாத்திரமே முதன் முதல் சர்வஜன வாக்குரிமை வழங்கியது -

ஆசியாக் கண்டத்தில் இலங்கை மாத்திரமே முதன் முதல் சர்வஜன வாக்குரிமை வழங்கியது -

Penulis : kirishnakumar on Friday, March 10, 2017 | 8:45 AM

(துறையூர் தாஸன்)

தெற்காசியநாடுகள் அனைத்தும் எமதுநாட்டைவிட கூடுதலானபெண் பிரதிநிதித்துவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.ஆப்கானிஸ்தானில் கூட 27 சதவீதபெண்களின் பங்களிப்புபாராளுமன்றத்தில் உள்ளதெனவும்பங்களாதேஸ் நாட்டில் பிரதமர்,எதிர்க்கட்சித் தலைவிமற்றும் சபாநாயகர் கூட ஒருபெண் ஆக இருக்கிறார்.சிலவேளைஅந்தநாட்டில் பிரதமநீதியரசரும் கூட ஒருபெண்ணாகஅமைந்தால் அதுஉலகசாதனையாகமாறும் என்று இருக்கிறது.ஆனால் நாங்கள் மிகச் சிரமப்படுகிறோம்.உலகிற்குமுதலாவதுபெண் பிரதமரைஉவந்தளித்தஎமதுநாட்டில் 5.3 வீதமான 13 பெண் பிரதிநிதிகளேபாராளுமன்றத்தில் இருக்கின்றனர் என இலங்கைத் தேர்தல்கள் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்தார்.

கல்முனைகிறிஸ்டா இல்லத்தில் மனிதஅபிவிருத்திதாபனம்,பெண்கள் ஒத்துழைப்புமுன்னணி,வேள்விபெண்கள் அபிவிருத்திஒன்றியம் என்பன இணைந்து சர்வதேசமகளிர் தினத்தையொட்டி ,பெண் அரசியல் ஆர்வலர்களுக்கானகளம் எனும் நிகழ்வில் கலந்துகொண்டுஉரையாற்றும் போதேஅவர் இதனைதெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துதெரிவிக்கையில்

ஓரிருவரைத் தவிர ஏனைய அனைத்துபெண் பிரதிநிதிகளும் கணவரின் இடத்திற்குவிதவைகளாக இருந்துபோட்டியிட்டவர்களாகவும்,தந்தையின் மகளாக இருந்துபோட்டியிட்டவர்களாகவுமேமக்கள் பிரதிநிதிகளாகதெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள் அதாவதுஅரசியல் குடும்பங்களில் இருந்தும் அரசியல் வாரிசுஉரிமையைபெற்றுமேவந்துள்ளனரேதவிரதனித்துநின்றுபோட்டியிட்டுவந்தவர்கள் மிகக் குறைவெனவும் எமதுஉள்@ராட்சிசபைத் தேர்தலில் நாட்டில் இருக்கின்ற 4000 மேற்பட்டஉறுப்;பினர்களுள் பெண்களில் சதவீதம் 1.3 எனவும் நூறு உறுப்பினர்களுக்குஒருபெண் உறுப்பினர் தான் உள்ளனர் என்றும் நினைக்கும் போதுபெரும் கேவலமாகஉள்ளதுஎனசுட்டிக்காட்டியிருந்தார்.
21 வயதாக இருந்தவாக்குரிமைவயதெல்லை 1959 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்கதிருத்தச் சட்டத்தின் மூலம் 18 வயதாககுறைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்துவாக்காளர்களின் எண்ணிக்கைமீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது,

எந்தவாக்காளர்களின் எண்ணிக்கைஅதிகரித்தாலும் சட்டவாக்ககழகம் பாராளுமன்றமாகமாறிபாராளுமன்றத்தின் பிரதிநிதிகளின் எண்ணிக்கைஅதிகரித்தாலும்  பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைஅதிகரிக்கச் செய்வதற்கானஎந்தவிதமானமானஏற்பாடுகளும் காணப்படவில்லை.

டொனமூர் யாப்பிலேயேசர்வஜன வாக்குரிமைஎன்றவிடயம் எமதுநாட்டிலே 1931 ஆம் ஆண்டுஅறிமுகப்படுத்தப்பட்டது.ஆனால் அதற்குமுன்னர் வரையறுக்கப்பட்டவாக்குரிமையே இருந்துள்ளது.ஆனால் பெண்களுக்குவாக்குரிமை இருக்கவில்லை.1910 ஆம் ஆண்டு இலங்கைக்குவந்தகுறும் மக்கலம் சீர்திருத்தம்சட்டவாக்ககழகத்திற்குதெரிவுசெய்யப்படுகின்றஉறுப்பினர்களில் பத்துபேரில் நான்குபேர் வாக்குரிமை மூலம் தெரிவுசெய்யப்படவேண்டும் என்றமுதலாவதுவாக்குரிமை மூலம் தெரிவுசெய்யப்படும் முறைஅறிமுகப்படுத்தப்பட்டது.அதற்கு இணங்கநகரஐரோப்பியதேர்தல் தொகுதி,கிராமஐரோப்பியதேர்தல் தொகுதி,பறங்கியர் தேர்தல் தொகுதி,இலங்கையர் தேர்தல் தொகுதிஎன இலங்கைநான்குதேர்தல் தொகுதிகளாகபிரிக்கப்பட்டதுஆனால் நகரஐரோப்பிய,கிராமஐரோப்பிய,பறங்கியர் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் அல்லர்.இலங்கைத் தேர்தல் தொகுதியில் 2750 பேர் வரையறுக்கப்பட்டவாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தார்கள்.ஆண்களாகவும் படித்தவர்களாகவும் உயர் பதவிகளைவகிக்கின்றவர்களாகவும் மிகக் கூடியசெல்வத்தைஉடமையாளர்களாககொண்டபிரிவினர் மாத்திரமேவரையறுக்கப்பட்டபதிவுசெய்யப்பட்டவாக்காளர்களாகஉள்ளடக்கப்பட்டிருந்தனர்.

அக்காலத்தில் சிங்களவர்கள்மத்தியில் சாதிபேதம் தலைவிரித்தாடியகாலத்தில் ஒருசாதியைச் சேர்ந்தடாக்டர் மாக்ரஸ் பெணார்ட் நியமிக்கப்பட,அவரைத் தோற்கடிக்கவேண்டும் ஆயின்அவருக்குப் பதிலாகவேறோருவரைக் கொண்டுவரவேண்டும் என்றுஎந்தச் சாதிக்கும் இல்லாதபொதுவானநபரானடாக்டர் சேர் பொன்னம்பலம் இராமநாதனைவெளிநாட்டில் இருந்துதேர்தலுக்காகஅழைத்துவந்தார்கள். அடுத்தசாதியினைச் சேர்ந்தசிங்களவர்கள் அவருக்குஆதரவாக இருந்ததுடன் யாழ்ப்பாணத்திலிருந்தவாக்காளர்கள் ஏறத்தாழ 440 பேரில் 410 பேர் சேர் பொன்னம்பலம் இராமநாதனுக்குவாக்களித்துஇதன் காரணமாகமொத்தமாக 1600 வாக்குகளைப் பெற்றுஇலங்கையின் முதன் முதலாகசட்டவாக்ககழகத்திற்குதெரிந்தெடுக்கப்பட்டபிரதிநிதிஎன்றபெருமைக்குஆளானார்.இவ்வாறுமுதலாவதுஆரம்பித்ததேர்தல் முறை 1931 ஆம் ஆண்டுசர்வஜன வாக்குரிமைவந்தபோது 21 வயதுக்குமேற்பட்டஆண் பெண் இருபாலாருக்கும் வாக்குரிமைஎன்றநிலைவந்தது.
இலங்கைக்கு 1931 ஆம் ஆண்டுசர்வஜன வாக்குரிமைகிடைக்கப்பெற்றபோதுஆசியாக் கண்டத்திலுள்ளஎந்தநாட்டுக்குமேவாக்குரிமைகிடைக்கவில்லையெனவும் அவுஸ்ரேலியாநீயூசிலாந்துஆகிய இரண்டுபிரதேசங்களையும் உள்ளடக்கியஆசியாக் கண்டத்தையும் உள்ளடக்கிபார்த்தபோது இலங்கைக்கு முன்புவாக்குரிமைகிடைக்கப்பெற்றஒரேநாடாகநியூசிலாந்துமாத்தரம் தான்உள்ளதெனவும் உண்மையில் எங்களுக்கு சர்வஜன வாக்குரிமையைஉவந்தளித்தபிரித்தானியாவுக்குக் கூட 1928 ஆண்டுதான் சர்வஜன வாக்குரிமைகிடைத்துள்ளது.

அதிலிருந்து மூன்றுஆண்டுகளுக்குபிறகே இலங்கைக்குகிடைத்துள்ளதெனவும் ஏறத்தாழ 85 ஆண்டுகளுக்குமேற்பட்டவரலாற்றைக் கொண்டசர்வஜன வாக்குரிமையைக் கொண்டஎமதுநாட்டில் எமதுபெண்கள் நாங்கள் நினைக்கின்றஅளவுக்குபிரதிநிதித்துவபங்களிப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.

2016 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்கஉள்@ர்  அதிகாரசபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தில் விருப்புவாக்கு,தொகுதிவாரிபிரதிநிதித்துவம் கொண்டகலப்புவாக்களிப்புமுறையேபுதியஉள்@ராட்சிதேர்தலில் உள்ளதென்றும் கட்டாயமாகஒவ்வொருஉள்@ராட்சிசபைகளிலும் இருக்கின்றமொத்தஉறுப்பினர்களுள் ஆகக் குறைந்தது 25 சதவீதம் பெண்களாக இருப்பார்கள் என்றும் சிலவேளைகளில் ஒருஉள்ளுராட்சிசபைத் தேர்தலில் நூற்றுக்கு நூறு வீதஆசனங்களையும் பெண்கள் பெறக்கூடியவாய்ப்புள்ளதென்றும்குறிப்பிட்டிருந்தார்.

விரும்பியோவிரும்பாமலோஓவ்வொருஉள்@ராட்சிசபையையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 25 சதவீதகட்டாயகோட்டாமுறையைபெண்களுக்காகஅறிமுகப்படுத்திஉள்ளதுடன் 30 பேர் தொகுதிவாரிபிரதிநிதித்துவத்தில் தெரிவுசெய்யப்படுவதனுடன் 09 பேர் விகிதாசாரபிரதிநிதித்துவத்துடன் தெரிவுசெய்யப்படுவார்கள் என்றும்குறிப்பிட்டிருந்தார்.

பிரதேசசெயலாளர்கள்,மருத்துவர்கள்,சட்டத்துறைஅலுவலர்கள்,வலயக் கல்விஅதிகாரிகள்,சமயத் தலைவர்கள்,இலங்கைமனிதஉரிமைஆணைக்குழுவின் இணைப்பாளர்கள்,பொலிஸ் அதிகாரிகள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,சிறுவர் நன்நடத்தைபிரிவின் அதிகாரிகள்,பாடசாலைஅதிபர்கள்,மாணவர்கள்,சிறுவர் பெண்கள் தொடர்பாககடமையாற்றும் உத்தியோகத்தர்கள் இதன் போதுகலந்துகொண்டனர்.Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger