சூரியா பெண்கள் அமைப்பின் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் 25வது ஆண்டு நிறைவு நிகழ்வு

மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் 25வது ஆண்டு நிறைவு மற்றும் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு “கூற்று” நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

ஒருபோதும் தனித்ததல்ல என்னும் தலைப்பில் இன்று வியாழக்கிழமை காலை இந்த நிகழ்வு சிறப்பான முறையில் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் 25வது ஆண்டில் தடம்பத்தித்துள்ள நிலையில் அது மேற்கொண்டுவந்த செயற்பாடுகள் தொடர்பான பதிவுகளை உள்ளடஙக்கியமாக இந்த கூற்று நூல் வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது.’

நூல்வெளியீட்டினை தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இதில் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள்,மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

வடகிழக்கில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளுக்கு எதிராக துணிந்து குரல் எழுப்பிவந்ததுடன் பல்வேறு போராட்டங்களையும் விழிப்புணர்வுகளையும் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்திம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.