ஜெயந்திபுரம் சிரேஷ்ட பிரஜைகளுக்கான அலுவலகம் திறப்பு விழா

(லியோன்)

சிரேஷ்ட பிரஜைகளுக்கான அலுவலக கட்டிடம் இன்று மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கிராம சேவையாளர் பிரிவில் திறந்து வைக்கப்பட்டது
.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட  மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கிராம சேவையாளர் பிரிவில்  சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர் வாழ்வளிப்பு மீள் குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள்    அமைச்சின்   நிதி  ஒதுக்கீட்டின்    கீழ் நிர்மாணிக்கப்பட்ட  சிரேஷ்ட பிரஜைகளுக்கான அலுவலக கட்டிடம் இன்று திறந்துவைக்கப்பட்டது .

ஜெயந்திபுரம் சிரேஷ்ட பிரஜைகள் சங்க தலைவர் யே..வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் வி .தவராஜா மற்றும்  மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா .நெடுஞ்ச்செழியன் ஆகியோர்  அதிதியாக கலந்துகொண்டு  அலுவலக கட்டிடத்தை  திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் இந்நிகழ்வினை  சிறப்பிக்கும் முகமாக  கட்டிட  வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வும் சிரேஷ்ட பிரஜைகளினால் அதிதிகளுக்கு  பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது .

இந்த நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி . முகுந்தன் , இருதயபுரம் திரு இருதய நாதர் ஆலய பங்குதந்தை  லெஸ்லி ஜெயகாந்தன் ,மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ் அருள்மொழி , பாஸ்டர் மரியதாஸ் ,ஜெயந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தோமஸ் கந்தையா , ஜெயந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ் .முகுந்தன் ,கிராம சேவை உத்தியோகத்தர் வி .லவகுமார் ,ஜெயந்திபுரம் சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , சிரேஷ்ட பிரஜைகள் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .