புனித தெரேசா பெண்கள் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி

    

  (லியோன்)

மட்டக்களப்பு புனித தெரேசா பெண்கள் வித்தியாலய  இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு புனித தெரேசா பெண்கள் வித்தியாலய  மெய்வல்லுனர் திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டி (20) மாலை  பாடசாலை மைதானத்தில் பாடசாலை அதிபர் திருமதி  எம் . பேரின்பநாதன் தலைமையில்  நடைபெற்றது

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் , காத்தான்குடி வைத்தியசாலை பல் வைத்திய நிபுணர் வைத்தியர் கே . மேகநாதன் ,மன்முனை வடக்கு  கோட்டக்கல்வி பணிப்பாளர் .சுகுமாரன் மற்றும் அருட்சகோதரிகள் ,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர், அதனை தொடர்ந்து  தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன்  மாணவர்களின் இல்ல அணிவகுப்பு  நடைபெற்றது

இதனை தொடர்ந்து இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வுகள் விளையாட்டு  ஆரம்பமானது, இவ் விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்களின் ஓட்டப்போட்டி, மாணவர்களின் உடற்பயிற்சி பயிற்சி, வினோத உடை போட்டி, மற்றும் பழைய மாணவிகள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள் ஆகியோரின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும்  நடைபெற்றது .

இப் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வாக  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது.