கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் சமய கலை கலாசார விழா

(லியோன்)

மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் சமய கலை கலாசார விழா  கல்லடி ஸ்ரீ  முருகன் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது


முன்னூறு வருடங்கள் பழைமை வாய்ந்த  மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் பிரதிஷ்டப் பண்ணப்பட்டு நூறு ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் ஆலய  பரிபாலன சபையின் ஏற்பாட்டில் இந்து சமய கலை கலாசார விழா ஆலய  தலைவர் டி .சரவணபவான் தலைமையில் (05) ஞாயிற்றுக்கிழமை  மாலை நடைபெற்றது .  

நடைபெற்ற இந்த விழா நிகழ்வில்  ஆலயத்துடன் இணைந்து சேவையாற்றிய சிரேஷ்ட பிரஜைகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் ஆலயத்திற்காக சேவையாற்றுகின்ற இளைஞர்கள் மகளிர் மற்றும் ஆலயத்தினால் நடத்தப்பட்ட கலாசார போட்டிகளில் வெற்றிப்பெற்ற பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கு  பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி .தவராஜா , மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர்  த . மலர்ச் செல்வன்  , மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன். கல்லடி விவேகானந்தா மகளிர் வித்தியாலய அதிபர் திருமதி .ஹரிதாஸ் , மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் , சமுர்த்தி உத்தியோகத்தர் , ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் , பாடசாலை மாணவர்கள் .ஆசிரியர்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்