செங்கலடி கணபதி நகர் கிராமத்திற்கான குடிநீர் வழங்கும் நிகழ்வு

(லியோன்)

செங்கலடி கணபதி நகர் கிராமத்திற்கான குடிநீர் வழங்கும் ஆரம்ப  நிகழ்வு இன்று நடைபெற்றது
. .

மட்டக்களப்பு பாம் புவுன்டேசன்  நிறுவனத்தினால் ஏறாவூர் பற்று செங்கலடி  பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மூன்றாண்டு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் செங்கலடி கணபதி நகர் கிராமத்திற்கான குடிநீர் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு (03) இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

இதன் பிரதான நிகழ்வு பாம் புவுன்டேசன்  நிறுவன  திட்ட முகாமையாளர் அருளானந்தம் சக்தி  ஒழுங்கமைப்பில்   பாம் புவுன்டேசன்  நிறுவன  பணிப்பாளர் சுனில் தொம்பே பொல தலைமையில்  செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் நடைபெற்றது

இந்நிகழ்வில் பாம் புவுன்டேசன்  நிறுவன  பங்குதாரர்களான யுவர்சைட் நிறுவன  இலங்கைக்கான பிரதிநிதிகள் , செங்கலடி பிரதேச செயலாளர்  உதயஸ்ரீ ,  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் ,  நீர்ப்பாசன திணைக்கள  அதிகாரிகள் ,சுகாதார வைத்திய அதிகாரி ,பொதுசுகாதார பரிசோதகர் ,  பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பயனாளிகள் என பலர் கலந்துகொண்டனர் .

இதன்போது  பங்குதாரர்களை கௌரவிக்கும் வகையில்  நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது .


மட்டக்களப்பு பாம் புவுன்டேசன்  நிறுவனத்தினால் செங்கலடி கணபதி நகர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்களுக்கான   குடிநீர்  வழங்கும் திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று நடைபெற்ற நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளுக்கு செங்கலடி கணபதி நகர் பொதுமக்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர் .