கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் சிறப்பான முறையில் நடைபெற்ற இளைஞர்களுக்கான உடல் நல மேம்பாட்டு ஆரோக்கிய வார நிகழ்வுகள்.

(சசி துறையூர்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் உடல் நல மேம்பாட்டு ஆரோக்கிய வாரத்தினை முன்னிட்டு கடந்த 06.02.2017 தொடக்கம் 12.02.2017வரை பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.

அந்த வகையில்  திரு எஸ்.சபியதாஸ் கோறளைப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரியின் ஏற்பாட்டில்     தொற்றா நேய்களை கட்டுப்படுத்தி விளையாட்டு மற்றும் உடல் நலத்தினை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 11.02.2017 இளைஞர்களுக்கான தினத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் அதிகளவான இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தனர்.

பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் R.நிதிராஜ், பொது சுகாதார பரிசோதகர் J.யசோதரன் ஆகியோரால் போசாக்கான உணவுப்பழக்கம் உளநல மேம்பாடு தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும் உடற்பயிற்சி பயிற்சிகள் தற்காப்புகலை பயிற்றுவிப்பாளர் A.L.A கபூர் அவர்களினால் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.