கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஈஸ்வரர் ஆலயத்தில் மாகாசிவராத்திரி தினத்தினை முன்னிட்டு மாபெரும் பக்தி இசை நடன நிகழ்வுகள்.

(சசி துறையூர்)
ஈழத்து சுயம்புலிங்க ஆலயங்களில் ஒன்றாக வரலாற்று புகழ்பெற்ற "கல் நந்தி புல் உண்டு வெள்ளையனை வெளியேற்றி உலகோரை வியப்பில் ஆழ்த்திய கிழக்கிலங்கையில் தேரோடும் தான்தோன்றீஸ்வரன் கொக்கட்டிச்சோலையான் பதியினிலே" இம் முறையும் வழமை போன்று    24.02.2017 ல் மாகாசிவராத்திரி விரத பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடைபெறவுள்ளது.

விரதத்தினை சிறப்பிக்கும் முகமாக இம் முறையும் எம்பெருமான் அருளாசியுடன் ஆலய முன்றலில் மூன்றாவது தடவையாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கண்டி பெல்வூட் நுண்கலைபீட மாணவர்களின் பக்தி இசை நடன கலை நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யயப்பட்டுள்ளதாகவும் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் பட்டிப்பளை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி அமரசிங்கம் தயாசீலன் எமது இணையத்தளத்துக்கு தகவல் தெரிவித்தார்.