செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்திற்கு செல்லும் பிரதான வீதியினை செப்பனிட்டு தருமாறு மாணவர்கள் கோரிக்கை

(லியோன்)

செங்கலடி விவேகானந்தா  வித்தியாலயத்திற்கு செல்லும் பிரதான  வீதியினை செப்பனிட்டு வீதிக்கான  வடிகான் அமைத்து  தருமாறு மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்


மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபைக்குட்பட்ட ஐயங்கேணி கிராம பகுதியில் இருந்து செங்கலடி விவேகானந்தா  வித்தியாலயத்திற்கு மாணவர்கள் செல்லும் பிரதான  வீதியினை செப்பனிட்டு வீதிக்கான  வடிகான் அமைக்கப்பட்டு வீதியினை  அமைத்து தருமாறு மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .

ஐயங்கேணி , தளவாய் , ஒருமுளைச்சோலை ஆகிய கிராமங்களில் இருந்து செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்திற்கு வருகை தரும் மாணவர்களின் நலன் கருதி மாணவர்ளின் பெற்றோர்களும் ,பாடசாலை சமூகமும் இவ்வீதி தொடர்பாக கடந்த காலங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் ,அரசியல் வாதிகளுக்கும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் இதுவரை இவ்வீதி தொடர்பாக எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை கவலை தெரிவிக்கின்றனர் .

இந்நிலையில் தற்போது இந்த பிரதான வீதி வெள்ளநீரினால்  மூழ்கி கிடப்பதம்னால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர் .

இவ்வாறான நிலையில் மழைக்காலங்களில் மாணவர்கள் இவ்வீதி ஊடாக பாடசாலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்படுவதாக பெற்றோர்களும் கவலை தெரிவிக்கின்றனர் .

தற்போது இந்த  பாடசாலை வீதி வெள்ளநீரினால் மூழ்கி கிடப்பதனால் இந்த வரட்சியான காலத்திலும்  மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக  ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை செயலாளர் கே .பேரின்பராஜா கவணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது .


குறித்த வீதியினை இன்று (03) வெள்ளிக்கிழமை பார்வையிட்ட பிரதேச சபை செயலாளர்  குறித்த வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக தெரிவித்தார் .