பொதுமக்கள் நடமாடும் பிரதான இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கான சட்ட நடவடிக்கை

(லியோன்)

ஜனதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்  நாடளாவிய ரீதியில் தற்போது  போதைப்பொருள் ஒழிப்பு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது .


போதைப்பொருள் பாவனை அதிகூடிய மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில்  போதைப்பொருள் ஒழிப்பு  வேலைத்திட்டங்கள்  2017 பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

இதன்கீழ் இன்று மட்டக்களப்பு நகர் பகுதிகளில் பொதுமக்கள் நடமாடும் பிரதான இடங்களான ,பஸ் தரிப்பு நிலையங்கள் , பொது மலசல கூடங்கள், பொதுசந்தை போன்ற பிரதான இடங்களில்  புகைப்பிடிப்பவர்களுக்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன .

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மட்டக்களப்பு மாநகர பொது சுகாதார பரிசோதகர்களும் , மட்டக்களப்பு மாவட்ட மதுவரி  தினைக்களமும்  இணைந்து  இந்த நடவடிக்கையினை இன்று  மேற்கொண்டனர் .


இன்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட நபர்களுக்கு எதிராக நீதிமன்ற சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு எச்சரிக்கை துண்டு பிரசுரங்களும்  காட்சிப்படுத்தப்பட்டன