மட்டக்களப்பு மகாஜன மகளிர் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி

(லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு மகாஜன மகளிர் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி (17) மாலை மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் பாடசாலை அதிபர் கே .அருமைராஜா   தலைமையில் இடம்பெற்றது.


விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே .துரைராஜசிங்கம் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ,  உதவிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி )வி .லவக்குமார், மன்முனை வடக்கு  கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ .சுகுமார்,  ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர்,

அதனை தொடர்ந்து  தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன்  மாணவர்களின் இல்ல அணிவகுப்பு இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வுடன் விளையாட்டுக்கள்   ஆரம்பமானது,

இவ் விளையாட்டு நிகழ்வுகளில்  மாணவர்களின் ஓட்ட ப்போட்டி, கயிறிழுத்தல் , குண்டெறிதல் , மாணவர்களின் தேக பயிற்சி, வினோத உடை போட்டிமற்றும் பழைய மாணவிகள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள் ஆகியோரின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது,


இப் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வாக  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது.