கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப்பெருவிழா

மட்டக்களப்பு பொதுச்சந்தைக்கு அருகில் உள்ள கோட்டைமுனை அரசடிப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப்பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நீண்ட காலமாக மட்டக்களப்பு மத்தியில் இருந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரமளிக்கும் ஓங்கார பிரணவ சொரூபனான அரசடிப்பிள்ளையார் ஆலயத்தின் மஹோற்சவப்பெருவிழாவானது பத்து தினங்கள் நடைபெறவுள்ளது.

புண்ணியாகவாசனம்,அங்குரார்ப்பணம்,ரட்சாபந்தனம்,யாகபூஜை நடைபெற்று கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்று கொடிச்சீலை வசந்த மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு எழுந்திருளியிருந்த விநாயகருக்கு விசேட பூஜை நடைபெற்றது.


பத்து தினங்கள் நடைபெறவுள்ள உற்சவத்தில் எதிர்வரும் 08ஆம் திகதி புதன்கிழமை சுவாமி வீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் மறுதினம் காலை வியாழக்கிழமை மட்டக்களப்பு,கல்லடி கடற்கரையில் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.