மட்டக்களப்பு பெரியஉப்போடை புனித லூர்த்து அன்னையின் வருடாந்த திருவிழா நிறைவு

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியஉப்போடை புனித லூர்த்து அன்னையின் வருடாந்த திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கொடியிறக்கத்துடன் சிறப்பாக நிறைவுபெற்றது.


கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் திருவிழாவில் தினமும் திருப்பலி பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றுவந்தன.

இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை ஆலயத்தில் திருப்பலி பூஜைகள் நடைபெற்று திருச்சொரூப பவனி நடைபெற்றது.இந்த திருச்சொரூப பவனியில் ஆயிரக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

இன்று காலை ஆலயத்தின் பங்குத்தந்தை டெக்ஸ்டர் கிறே தலையில் திருவிழாவின் இறுதி விசேட திருப்பலி பூஜை நடைபெற்றது.

இந்த விசேட திருப்பலியை மட்டக்களப்பு அம்பாளை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை நடாத்தினார்.

திருப்பலி பூஜையின் போது பக்தர்களுக்கு ஆயரினால் ஆசிகள் வழங்கப்பட்டதுடன் விசேட தேவ இசை நிகழ்வும் நடாத்தப்பட்டது.

திருப்பலியை தொடர்ந்து சொரூபம் ஆலய முன்றிலுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்று கொடியிறக்கம் நடைபெற்றது.

இதன்போது மட்;டக்களப்பு மாவட்டத்தின் பிரபல சமையற்காரர் தாசன் அவர்களினால் அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.