மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 69 ஆவது சுதந்திரத்தின நிகழ்வுகள்

(லியோன்)

இலங்கையின் 69 வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன .


மட்டக்களப்பு மாவட்டத்தில்  6வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் மாவட்டத்தின் சகல அரச திணைக்களங்களிலும் மற்றும் அரச அலுவலங்களில் விசேட நிகழ்வுகள் இன்று நடைபெற்றது . 

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 69 ஆவது சுதந்திரத்தின நிகழ்வுகள் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது .

ஆரம்ப நிகழ்வாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து அதிதிகளை பொலிசார், இராணுவம் மற்றும் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் , கலாசார நிகழ்வுகளுடன்   மட்டக்களப்பு வெபர் மைதானத்திற்கு  அழைத்துவரப்பட்டனர் .

இதனை தொடர்ந்து வெபர் மைதானத்தில் நடைபெற்ற 69 ஆவது சுதந்திரத்தின நிகழ்வில் பிரதம அதிதியாக  கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டு  தேசிய கொடியை ஏற்றி  69 வது சுதந்திர தின  நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார் .
 
இந்நிகழ்வில் மட்டக்களப்பு , அம்பாறை  பிரதி பொலிஸ்மா  அதிபர்  டப்ளியு .ஜெ .ஜாகொட  ஆராச்சி .மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் .கிரிதரன்மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராஜா மட்டக்களப்பு  பொலிஸ்  நிலைய   பொறுப்பதிகாரி   எம் .எம் .ஜி .டி. தீ காஹா வதுற மற்றும் பாதுகாப்பு படை தலைமை  அதிகாரிகள் , பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,அரச திணைக்கள அதிகாரிகள் , பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,அரச அலுவலக அதிகாரிகள் ,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர் .            
 
இலங்கையின் 69 வது தேசிய சுதந்திர தினத்தினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதைப்பந்தாட்ட அணிக்கும் மட்டக்களப்பு மாநகர சபை உதைப்பந்தாட்ட அணியினருக்குமிடையிலான சிநேகபூர்வ உதைப்பந்தாட்ட போட்டியும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது