31வது ரூபவாகினி கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தை வெற்றி கொண்டது வாழைச்சேனை வள்ளுவர் இளைஞர் கழகம்.

(சசி துறையூர்)தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் அனுசரணையில் நடாத்தி வரும்      31வது இளைஞர் சேவை ௹பவாஹினி சவால் கிண்ண கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த 2017.02.18ம் திகதி
 கல்லடி ஶ்ரீ முருகன் விளையாட்டு மைதானம் மற்றும் சிவானந்தா விளையாட்டு மைதானங்களிலும்
 நடைபெற்றது.

 சுற்றுப் போட்டியின் ஆரம்ப  நிகழ்வில்
கல்லடி  சுவாமி விவேகானந்தர்  ஆச்சிரம  சுவாமிஜி  அவர்கள்,  தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர், நிஸ்கோ முகாமையாளர்,  மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகள், மற்றும் இளைஞர் சேவை உத்தியோகஷ்தர்கள், பலரும் கலந்து கொண்டனர்.

ஆண் பெண் பிரிவுகளாக நடைபெற்ற இச் சுற்றுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கோறளைப் பற்று  வாழைச்சேனை வள்ளுவர் இளைஞர் கழகம் தமது அபார திறமையை வெளிக்காட்டி   தொடர்ச்சியாக இரண்டாவது தடைவையாகவும்  முதலாவது இடத்தினை பெற்றுக்கொண்டது.

இப் போட்டியில் இரண்டாவது இடத்தினை கல்லடி உதயகீற்று இளைஞர் கழகமும் பெண்களுக்கான பிரிவில் மண்முனை வடக்கு கோட்டைமுனை இளைஞர் கழகமும் வெற்றி பெற்றதோடு இரண்டாமிடத்தை களுதாவளை ஜோர்டன் இளைஞர் கழகம் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


 வெற்றி பெற்றுள்ள இவ்விரு அணிகளும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி    எதிர்வரும் 2017.03.11-2017.03.12ம் திகதிகளில் மஹரகம விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள 31வது தேசிய இளைஞர் சேவை ௹பவாஹினி கரப்பந்தாட்டா சுற்றுப்போட்டியில் பங்குபற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.