News Update :
Home » » அக்கரைப்பற்றில் மதுவரித்திணைக்களத்தின் அதிரடியில் 25 புகையிலைத்தூள் மூடைகளும் 15 ஆயிரம் பீடிகளும் மீட்பு

அக்கரைப்பற்றில் மதுவரித்திணைக்களத்தின் அதிரடியில் 25 புகையிலைத்தூள் மூடைகளும் 15 ஆயிரம் பீடிகளும் மீட்பு

Penulis : kirishnakumar on Tuesday, February 14, 2017 | 9:52 AM

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பீடி உற்பத்தி நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு அங்கு சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த புகையிலைத்தூள் 25 மூடைகள் மற்றும் 15ஆயிரம் பீடிகள் என்பனவற்றை கல்முனை மதுவரித்திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

அக்கரைப்பற்று ஹிஜிரா நகர் பகுதியில் பெண் ஒருவரினால் இயக்கப்பட்டு வந்த பீடி உற்பத்தி நிலையத்திலேயே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி பிரதான பரிசோதகர் எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.

குpடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரனின் ஆலோசனையின் கீழ் கல்முனை மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி பிரதான பரிசோதகர் எஸ்.தங்கராஜா தலைமையில் மதுவரித்திணைக்கள பரிசோதகர்களான ஏ.ஆனந்தநாயகம், கே.வாசன், மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்களான கே.செந்தில்வர்ணன், எஸ்.செல்வராஜர்,சாஜன் மேஜர் கே.அரசரெத்தினம்,தனஞ்செயன் ,ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டனர்.

இதன்போது 25 புகையிலைத்தூள் மூடைகளும் 02 மூடை பீடி சுற்றும் இலைகள் மற்றும் 56பண்டல்களைக்கொண்ட 15ஆயிரம் வீடிகள் சட்ட விரோதமான முறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பெண் ஒருவர் மீது சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாண மதுவரித்திணைக்கள உதவி ஆணையாளர் கே.எம்.ஜி.பண்டாரவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கடந்தவாரமும் அக்கரைப்பற்று பகுதியில் மூன்று கோடி ரூபா பெறுதியான 264 புகையிலைத்தூள் மூடைகள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் போதையொழிப்பு செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை மதுவரித்திணைக்களத்தினால் பல்வேறு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.








Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger