மண்முனை வடக்கு கலாசார அதிகார சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான ஆரம்ப கூட்டம்

(லியோன்)

மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான ஆரம்ப கூட்டம் பிரதேச செயலகத்தில்  நடைபெற்றது .


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின்  ஒழுங்கமைப்பில் மண்முனை வடக்கு பிரதேச கலாசார அதிகார சபையும் கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடத்திய மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான ஆரம்ப கூட்டம்  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன்  தலைமையில் இன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .

குறித்த  கூட்டத்தில் 2016 ஆம் ஆண்டில்  நடைமுறை படுத்தப்பட்ட செயல்திட்டங்கள் தொடர்பாகவும் , 2017 ஆம் ஆண்டில் நடைமுறை படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது . .
நடைபெற்ற 2017 ஆம் ஆண்டுக்கான ஆரம்ப கூட்டத்தில்  மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அதிகார  சபையின் அங்கத்தவர்களான மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கலாசார அதிகார சபையின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர் .