தமிழ் மக்களின் அவலம் சித்தரிக்கும் " புதியதோர் உலகம் செய்வோம்".......

(சசி துறையூர்)
அண்மையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் அவர்களினால் வாசிக்கப்பட்ட தமிழ் மக்களின் இன்றைய வாழ்வியலை புடம் போட்டு காட்டும் கவிதை.

"புதியதோர் உலகம் செய்வோம்"

உழவர் வயல்கள் வரட்சினால் சேதம்!
உரிமை அரசியல் இனவாதிகளால் சேதம்!
வறண்ட பூமியில் இந்தவருட தைப்பொங்கல்!
வழமைக்கு மாறாக மழையில்லை பனிதான்!
குழத்திலும் நீர்இல்லை குடிநீரும் தட்டுப்பாடு!
உன்னிச்சை நீர்திட்டம் ஒருமாதம் மட்டுமே!
என்னப்பா இது நாடு நல்லாட்சியின் காட்சி!
இறைவன் திருவிளையாடல் எங்கள் நிலமே!
போடிமார்கள் வாடிகளில் ஏக்கத்தவிப்பு!
காடுகளும் கருகிறது காணவில்லை மழையை!
வீடுகளில் பயிரும் வெயில்பட்டு கருகிறது!
கூடுகளில் பறவைகளும் கொதிக்கிறது!
மாடுகளும் மேச்சலின்றி வாடி திரிகிறது!
பால்தயிரு சோற்றுக்கும் பஞ்சம் வரபோகுறது!
படுவான்கரை விளைநிலமும் வியர்கிறது!
எழுவான்கரை வெற்றிலையும் ஏங்குகிறது !
என்னதான் பொங்கல் இந்த வருடத்தில்!
வறியதோர் வாழ்வும் வதைகளால் தாழ்வும்!
புதியதோர் உலகம் செய்ய புதுஆண்டு விடுமா!
பொறுத்துப்பார்ப்போம் பூமாதேவி சிரிக்க!
பொல்லாங்கு கொண்ட நாட்டின் போதனை!
பூர்வீகத்தமிழருக்கு இன்னும் தீர்வில்லை!

ஆண்டு இரண்டாயிரத்து பதினேழு தைபிறந்துள்ளது!
ஆயினும் எங்களுக்கு நிம்மதி பிறக்கவில்லை!
ஆயிரத்து தொழாயிரத்து நாற்பத்து எட்டில் இருந்து!
ஒவ்வரு தையிலும் வழிபிறக்கும் என்றுதான் சொல்வதை கேட்டோம்!
வலிதான் கண்டோம் வதைதான் கண்டோம்!
வாழ்கையில் நிம்மதியற்று ஏட்டுச்சுரக்காய் வாக்குறுதிகளுடன்!
இலகுகாத்த கிளிகளைப்போல் கானல்நீராய்
காலத்தை கடத்துகின்றோம்!

பழமைநிலத்தை பண்படுத்தி ஆட்சிசெய்த!
பூர்வீகப்பரம்பரைகள் நாங்கள் என்று மெய் உரைக்கிறோம்!
புதியதோர் உலகம் செய்யபுறப்பட்ட தமிழர்
நாங்கள்!
புலம்பெயர்தேசமெல்லாம் பரந்துதான் வாழ்ந்தபோதும்!
பலம் பெற்ற காலத்தில் பயன்பெற்ற ஒழுக்கம் இன்றில்லை!
களமாடி வெற்றிகண்ட கதைகள் எமினத்தில்
உண்டு!
இனம்வாழ தன்னையே ஆகுதியாக்கிய வரலாறும் எமக்குண்டு!
அகிம்சையால் உரிமைகேட்டு அலுத்து ஏமாற்றப்பட்டு!
ஆயுதமும் ஏந்தி போராடி சாதித்த வேளையிலும்!
புதியதோர் உலகத்தார்கள் பொல்லாங்கு சூட்சியினால்!
புரியாமல் இனவாதத்திற்கு உதவியதால் அதுவும் மௌனமானது!
முள்ளிவாய்கால் வரையும் மூண்ட பெரும்சமரில்!
முந்நூறாயிரம் எம்மவரை இழந்தோமே!
முடித்துவிட்டோம் தமிழர்கதைஎன முழக்கமிட்ட செய்தி கேட்டோம்!
பால்சோறு கொடுத்து பாதைஎல்லாம் வெற்றிவிழா கண்டோம்!
தோற்ற இனம் என்று எமக்கு முத்திரை குத்தினார்கள்!
தேற்ற ஆள் இல்லா பாவிகள்போல் பதறினோமே!
ஏற்ற தீர்வுக்காய் எள்ளளவும் மாறாமல்!
புதியதோர் உலகம் செய்ய புறப்பட்டு உழைக்கின்றோம்!
அனைத்துலக மயப்படுத்தலில் தமிழ்தேசிய அரசியல்!
அடிஎடுத்த காலமது அவதானத்துடன் செயற்படும் வேழை இது!
ஆயினும் கொள்கையைமாற்றமுடியாது!
ஆண்டபரம்பரை மீண்டும் விடிவுடன் வாழ்வாங்குவாழ!
சுயநிர்ணய உரிமைபெற்று சுதந்திர தீர்வை நோக்கி!
வடகிழக்கு இணைப்புடனே வளமான வாழ்கை வேண்டும்!
வஞ்சகமாய் பிரித்து தாயகத்தை சதிசெய்தால்!
வறண்ட கதைகூறி இருண்ட தீர்வைத்தந்தால்!
வதைகண்ட எங்கள் இனம் ஏற்காது உண்மை!
சட்டமும் நீதியும் சமன் என்பது இங்கு பொய்!
மனச்சாட்சி மௌனம் காக்க பொய்சாட்சிக்கு புகழாரம்!
போலிஉடையில் காவிகளுக்கும் மக்கள் குரல் என மட்டக்களப்பில் மந்திரி சொல்கிறார்!
மனம்வருந்துகிறது இனம் ஏங்குகிறது!
முடியவில்லை எமது பயணம் தொடர்கிறது இப்போதும்தான்!
கெடுபிடி அட்டகாசம் கேழ்விக்கு உள்பட்டநீதி!
அடிதடி சண்டைசெய்யும் ஆன்மீகப் போர்வைகள்!
ஆடாவடித்தனத்தைசெய்யும் காவி உடை ஆசாமிகள்!
ஆக்கிரமிப்பு செய்யும் ஆண்டவன் கல் சிலைகள்!
கௌதம புத்தபெருமான் கைகூப்பி வணங்க இங்கில்லை!
காட்சிப்பொருளாய் மாற்றி கலங்கப்படுத்தும் அசிங்கம் இங்கே!
நீதியும் செத்துப்போச்சு நியாயமும் எம் பக்கமில்லை!
அநீதியை தட்டிக்கேட்க வே புதியதோர் உலகம் செய்வோம்!
மனச்சாட்சி என்ன மன்றிலே வாதாட முடியுமா!
பொய்சாட்சி சொன்னால் பொல்லாங்கு செய்தோர்கும் விடுதலை!
காக்கி உடைகள் கணமுன்னே கொலைசெய்தாலும்!
தூக்கில் இடப்படார் தூக்கி எடுப்பார் பதவி உயர்வுடன் பணிசெய்யவும் வைப்பார்!
மாமனிதர் ரவிராஜ் படுகொலை தீர்பும் இதைத்தான் கண்டோம்!
எம்நாட்டு நீதி எமக்குதவாது என்றுதான் பன்னாட்டு நீதிக்காய்!
பகல் இரவாய் உழைக்கின்றோம் பலன் இன்னும் கிடைக்கவில்லை!
இலகுகாத்த கிளியாய் இந்தப் பொங்கலையும்
பொங்கினோம்!
இன்னும்தான் உழைக்கின்றோம் இலக்கை எட்டுவதற்காக!
தடைபலகண்டு சரிந்து விழுந்தாலும்!
கொலைபல கண்டு கொதித்து மடிந்தாலும்!
கொள்கைக்காய் ஒருகுரலில் இணைந்து பயணிப்போம்!
காலக்கேடுகள் கடந்த அறுபத்தொன்பது ஆண்டாய்!
அகிம்சைப்போர்காலத்தில் தந்தை செல்வா அமிர்தலிங்கம் வரை சொன்னார்கள்தான்!
ஆயினும் ஒன்றுமே தர ஓநாய்கள் மறுத்தன!
அதன்பின் ஆயுதம் போர்செய்த ஒப்பற்ற தியாகத்திலும்!
தலைவர் பிரபாகரனும் காலக்கேடுகளை சொன்னதை மறந்தா போயித்தம்!
இதுதாண்ட கடைசியடி என்றும் போர்செய்த
பூமி இது!
வெண்ணைதிரண்டு வரும்போதே வெள்ளை நாடுகள் உதவியால் அல்லவா!
ஏன் தொப்புள்கொடி நாடும்தானே கூட்டுச்சதியால்!
முள்ளிவாய்கால் அவலத்தை தந்தார்கள்!
மறந்தாபோனோம் மௌன மான கதையை!
மறக்கவாமுடியும் மண்பட்ட வேதனையை!
நினைக்க நினைக்க மனம்கொதிப்பதை யார் அறிவார்!
அணைக்க எமக்குயார் இருக்கார்!
அனைத்துலகத்தை நம்பித்தானே அரசியல் இப்போ செய்கிறோம்!
ஐயா சம்பந்தனும் அவர்களை நம்பித்தானே காலக்கேடும் கூறினார்!
ஒருவருடத்துக்குள் உண்மைத்தீர்வு வரவில்லை!
உருப்படியாய் வாக்குறுதி நிறைவேறவில்லை உண்மைதான்!
அரசியல்தீர்வுத்திட்டம் ஆராயப்படுகிறது என்றாலும்!
ஒற்றையாட்சிக்குள் தீர்வுத்திட்டத்தை ஏற்க மாட்டோம் என்றுதானே!
சம்பந்தன்ஐயா சமஷ்டிக்காய் உழைக்கின்றார்!
வடகிழக்கு இணைப்பைத்தான் கிழக்குமக்கள்
கோருகிறோம்!
இணையாத எந்ததீர்வும் எமக்குதவாது!
சறுக்கல் ஏற்பட்டால் தடங்கல் செய்ய முற்பட்டால்!
தலைமை சொல்லும் முடிவுக்கு நாம் தயாராகவேண்டும்!
இழுத்தடித்து ஏமாற்ற நினைத்தால் இலங்கைஅரசு!
எதிர்வினைகளை சந்திக்கும் என்பதை இராஐதந்திரத்தால் உரைக்கவேண்டும்!
புதியதோர் உலகம் செய்ய புறப்பட்ட வேளைஇது!
பழயதை மறந்துநாமோ வரலாற்றை மீட்க ஒண்ணா!
பரம்பரைத்தமிழர் நாங்கள் பட்ட துன்பத்திற்கு
பரிகாரம் வேண்டும்!
பம்மாத்து இன்னும் சொல்லி பயனற்றுப்போகாமல்!
நல்லோதோர் தீர்வுக்காக நாளெல்லாம் உழைப்போம் ஒன்றாய்!
கொலைசெய்தோர்கு எதிராக இப்போ கொடும்பாவி எரிப்பதில்லை!
கடத்தியவர்கெதிராக கண்டன ஆற்பாட்டம் இல்லை!
காய்த்தமரம்தான் கல்லெறிபடும் காலம்!
காட்டிக்கொடுத்தவர்களுக்கு கௌரவப்படுத்தும் கோலம்!
என்னென்று சொல்வதென்று எமக்கே தெரியாது!
அன்று யோகசுவாமி சொன்னதுதான் ஞாபகம் வருது!
ஏசுவார்கள் எரிப்பார்கள் உண்மையை எழுது உண்மையாகவே எழுது!
அது எங்கள் தலைமைக்கும் பொருந்தும்
ஏசுவார்கள் படத்தை எரிப்பார்கள் உண்மையாகவே இரு
ஒருகுரலாகநின்று ஒருகுடையில் இணைந்து
ஒன்றுபட்டுழைத்திடவே!
ஒற்றுமையாய் இலட்சியம் தவறாவண்ணம்!
ஈழத்து தமிழர்நாங்கள் இலக்கினை அடைவதற்காய்!
புதியதோர் உலகம் செய்வோம் பூமியில் தமிழராவோம்!

-அம்பிளாந்துறையூர் அரியம்-
(19/01/2017,மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு பொங்கல் விழாவில் வாசிக்கப்பட்ட புதியதோர் உலகம் செய்வோம் கவிதை இது)