முதல் மனைவி இருக்கும்போது மற்றுமொறு பெண்ணை திருமணம் செய்த கொண்டவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை

 (லியோன்)

முதல் மனைவியின் பதிவு திருமணத்தை மறைத்து முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது  மற்றுமொறு பெண்ணை திருமணம் செய்த கொண்ட நபருக்கு எதிராக ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் ,ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார் .


2004 ஆம் ஆண்டு பதிவு திருமணத்தின் பின் முதல் மனைவியை கைவிட்டு 2009ஆம் ஆண்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட கல்லடி பகுதியை சேர்ந்த எஸ் .தயாளன் என்பவருக்கு எதிராக 2010 .05.26 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .


குறித்த வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் பின்  2017.01.26 ஆம் திகதி வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான்  நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில்  மேற்கொண்ட விசாரணையின் போது குற்றவாளிக்கு எதிராக  சாட்சியங்கள் நிருபிக்கப்பட்டதன் காரணமாக குற்றவாளிக்கு எதிராக ஒரு வருட கடுழிய சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்துமாறும் தண்டனை விதித்து நீதிபதி  மாணிக்கவாசகர் கணேசராஜா தீர்ப்பளித்துள்ளார்.