கிரான் மத்திய கல்லூரியில் முதல் தடவையாக கணித,விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பித்துவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கிரான் மத்திய கல்லூரியில் 2019 ஆம் ஆண்டுக்கான உயர் தர கற்கைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பிரிவுகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.

பாடசாலை அதிபர் திரு சிவசுந்தரம் தலைமையில் சிவஸ்ரீ மு.சண்முகம் ஐயாவினுடைய ஆசியுடன் ஆரம்பமானது.

இதில் கல்குடா கல்விப்பணிமனையில் இருந்து பிரதி கல்விப்பணிப்பாளர் தினகரன் ரவி உட்பட பல அதிகாரிகள்,சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலய அதிபர் திரு.தவராஜா மற்றும் எமது பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

கணித பிரிவிற்கு கிரானைச்சேர்ந்த 2 மாணவர்களும் விஞ்ஞான பிரிவிற்கு 10 மாணவிகளும் சந்திவெளியில் கல்விகற்ற 1 மாணவி உட்பட இன்று 13 மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றார்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றார்களுக்கும் அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களையூம் உள்வாங்கி கற்றல் கற்பித்தலை மேம்படுத்தும் நோக்கில் மனப்பாங்கு விருத்திக்கான தியானம் மற்றும் ஊக்கப்படுத்தல் பயிற்சியூம் தொடர்ந்து இடம்பெற்றது.

இதனை நடாத்துவதற்காக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களான சிறிதரன் மற்றும் ஜெயகரன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.