News Update :
Home » » நிலைபேறான விவசாயம்-காலத்தின் கட்டாயம்! (கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் கவனத்திற்கு )(கட்டுரை)

நிலைபேறான விவசாயம்-காலத்தின் கட்டாயம்! (கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் கவனத்திற்கு )(கட்டுரை)

Penulis : kirishnakumar on Monday, January 9, 2017 | 9:37 AM


'வருமுன் காப்போம்'என்பதைவிட இன்று வந்துவிட்டதற்கு ஈடுகொடுப்போம் என்பதே விவசாயத்தைப் பொருத்தவரை சரியானதாகவிருக்கும்.

பருவம் தப்பிய மழை,வெள்ளம், புயல், விவசாய வீழ்ச்சி, உணவுத் தட்டுப்பாடு, பொருளாதார பிரச்சனைகள். ..இப்படியான பல வித தொடர் அனர்த்தங்களின் விளைவுகள் பற்றி 2007 ம் ஆண் டே பாரீஸ் சுற்றுச்சூழல் மாநாட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பல் நாடுகள் ஆயத்தமாகிய அதேவேளை'மகி ந்த சிந்தனை'யில் மட்டும் மகிழ் ந்து செயற்திறனில் பூஜ்யமாகிவி ட்டது எம் நாடு. விளைவு...இன்று எதிர்வு கூறப்படும் வறட்சி காரணமாக இந்த ஆண்டு 1லட்சம் மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்ய உத்தேசித்து ள்ளது. அதில் உடனடியாக 50 ஆயிரம் மெட்ரிக் டன் இந்தியாவில் இருந்து இறக்க உத்தேசம். ( இதையும் இந்திய ஆக்கிரமிப்பு என்று சொல்லிவிடு வார்களோ?)

இந்திய அரிசி: 

இதில் தமிழக அரிசியும் இருக்கக்கூடும். சரி..வறண்ட தமிழகம் இந்தியாவின் அரிசி உற்பத்தியில் 6ம் இடத்தில் உள்ளது. ஆக...வறண்ட தமிழகமே அரிசிஃபிற தானிய உற்பத்தியில் சிறப்பான இடத்தில் உள்ளது என்றால்..நீர் வளம் நிறைந்த இலங்கை அங்கி ருந்து அரிசி இறக்குமதி செய்யும் அவலநிலையில் உள்ளது.

இது ஏன் ? விவசாயத்திற்கு பருவமழையை-அதிக நீரை மட்டுமே நாம் நம்பியிருக்கும் நிலை.

இடைப்போகத்திற்கு நம்பி இருக்கும் நீர்த்தேக்கங்கள்கூட தெற்கில் பெய்யும் மழையிலேயே தங்கி உள்ளன.
அதனால் இடைப்போகமும் கேள்விக்குறியே! "நீரின்மை-வற ட்சி காரணமாக மட்டக்களப்பு மா வட்டத்தில் 52 ஆயிரம் ஹெக்டேரில் நெற்செய்கை பாதி ப்பு"....! ?

இந்த நிலையில் நாம் ஏன் தமிழகம் மற்றும் மடகாஸ்கர் விவசாயத்தைப் பின்பற்றக்கூடாது?

"நான் 20 ஏக்கரில் விதைத்துள்ளேன்-அதற்கு டிராக்டர், ஆள் கூலி...என்று அடு க்கிக் கொண்டு போகும்-பழம் பெருமையிலேயே இன்றைய எமது போடியார்கள் இருக்கின்றனர்!
ஆனால் கிடைப்பதோ குறைவான ஆதாயம் ,அல்லது நட்டம்! இதற்கு அவர் கள் மட்டுமே காரணம் அல்ல. மத்திய -மாகாண விவசாயப் பிரிவுகள், பல்கலைக்கழகம் போன்ற எல் லோருமே காரணமாகின்றனர்.

விவசாயி,வங்கி, பல்கலைக்கழகம், அரச விவ சாயத்துறை,வியாபாரி என்ற ஒருங்கிணைந்த திட்டம் வகுக்கப் படுவதில்லை.

விவசாய அபிவிருத்திக் கூட்டம் நடைபெறும் வழமைபோல் அங்கே விவசாயிகள் சங்கம், நீர்ப்பாசனம், உரவிநி யோகம்,திட்டம் வகுத்தல், என்று கூட்டம் முடியும். அவ்வப்போது நோய்த்தடுப்பு நடவடிக்கைகள். .இப்படியே சுழல்கிறது எமது விவசாயம்
விவசாயிக்குக் குறைந்த லாபம் அல்லது நட்டமே மிஞ்சும். எனவே மேற்கண்டவாறு ஒருங்கிணைந்த முறையில் திட்டம் வகுத்து விவசாயிகள் மனதில் மாற்றத்தை -உறுதியை ஏற்படுத்தினால் அது வெற்றியளிக்கும்.

20 ஏக்கரில் தூவல்முறை விதைப்பு, அதற்கான மனித வளம்,நீர்த்தேவை என்று பல்வேறு செலவுகளையும் கணக்கிட்டால்
மிஞ்சுவது சிறு லாபம் அல்லது நட்டம் எனத் தெரிந்தும் அதையே மீண்டும் மீண்டும் செய்வதை விடுத்து. ..

குறைந்த இடப்பரப்பில் தொழில் நுட்பத் தையும் மாற்றிச் செய்வதன்மூலம் தோல்வியில் இருந்து மீளலாமே! அவை பற்றி சற்றே விரிவாகப் பார்ப்போம்.

மடகாஸ்கர் மற்றும் தமிழக முறைகள்:

மடகாஸ்கர் --திருந்திய நெல் விளைச்சல் முறை- ளுசுஐ, 90 களில் மடகாஸ்கரில் கடும் வறட்சி ஏற்பட்டபோது கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் கண்டுபிடித்த வெற்றெகரமான முறை இது. இதனை இன்று இந்தியா முதல் சுமார் 25 உலக நாடுகள் கடைப்பிடிக்கின்றன. இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா,கர்நாடகம், திரிபுரா, சட்டிஸ்கர் போன்ற மாநிலங்கள் பின்பற்றுகின்றன.

காலநிலை மாற்றத்தால் எதிர்வுகூறப்படும் விதவிதமான புதுவகையான பயிர்ப்பீடைகள்,நோய்களைப் பொறுத்த அளவில் வழமையான தடுப்புமுறைகளை க் கடைப்பிடித்தால் வருங்காலத்தில் தோல்வியே மிஞ்சும். ஆதலின் தமிழகத்தின் தற்போதைய முறைகளைப் பின்பற்றலாம்.

(1) உயிரி உர உற்பத்தியும்,பாவனையும்:


நுண்ணுயிரிகள்:

டிறைகோ டெர்மா விர்டி(காளான் வகை)
சூடோமோனாஸ் (பெக்டீரியா) றைசோபியம்,பொஸ்போபெக்டீரியா, அசொடோ பெக்டர் போன்றன. ..

(2)உயிரியல் கட்டுப்பாடு :

டிறைக்கோ கிறம்மா கைலோனிஸ், டிறை க்கோ கிறம்மா ஜப்பானிக்கம், பிறக்கானிட் போன்றவை.
( 2008 ல் தமிழகம் சென்றிருந்த வேளை வடக்கில் புலிகள் மேற்கண்ட முறையைப் பின்பற்றி அங்கே வெற்றிகரமான விவசாயத்தை முன்னெடுப்பதாக அறியக் கிடைத்தது. சூசூ அனுராதபுரம் 'தயட்ட கிறு ள்ள' கண்காட்சியில் ,தென்னைச் சிலந்தியைக் கட்டுப்படுத்த 'சூடோமோனாஸ்' பரீட்சார்த்தத்தில் உள்ளது எனக் கூறினார்கள். )

(3)நீர் முகாமைத்துவம் :

பெரிய குளங்களைப் புனரமைக்கும் அதே வேளை மக்கள் கையகப்படுத்திய ,தூர்ந்து போன பல நூறு குளங்களையும் மீட்டு அவற்றைப் புனரமைக்க வேண்டும்.
சூசூமேட்டுப்பகுதியின் நில நீர்மட்டத்தை அதிகரிக்க இலகுமுறை கசிவுநீர் குட்டை கள் அமைக்க வேண்டும். (மழைக் கால நீர் சேமிக்க )
கிணற்று நீர் சிக்கனம்(குளியல் நீர்)
பரபரப்புரை செய்தல் வேண்டும்.
சூபாசன நீர் இறைப்பு : சூரிய சக்தி, கைமூல நீர் இறைப்பு யந்திரங்கள்(வுசயனடை pரஅp)
(எரிபொருள் சிக்கனத்தின் பொருட்டு )

(4) விதைகள் :

நெல்-பிற தானியங்கள். வறட்சியையும் நோய்,பீடைகளையும் தாங்கி வளரக்டிய விதை உற்பத்தி. பண்டைய விதை பாவனை.

(5) சுழற்சி முறை பயிர்செய்கைக்கு ஊக்கமளித்தல்.(குறைந்த நீர்த் தேவை- குறுகிய கால பயிர்கள் )
ஏற்கனவே கரடியனாறை அண்டிய பகுதிக ளில் நிலக்கடலை செய்கை பண்ணப்படுகிறது. நல்ல முயற்சி. ஆனால் அது தனியார் வியாபார நோக்கிலானது. ஆகையால் அதையே மீண்டும் மீண்டும் செய்ய முற்படுவர். எனவே அதைச் சற்றே மாற்றி ஏனைய போசாக்குத் தானியங்களையும் பயிரிட உந்துதல் செய்ய வேண்டும். ××உதாரணமாக சோயா ச் செய்கை(1974 களில் வவுனியாவுக்குப் பின்னர் பெரிய புல்லுமலைப் பகுதியில் இதனை வெற்றிகரமாகப் பயிரிட்டனர்.
நெல் வயல்களில் சுழற்சி முறை தானிய செய்கைக்கு ஊக்கமளித்தல்.

(6) வீட்டுத்தோட்டம்-நகர்ப்புற மாடி வீட்டுத் தோட்டம் :

வீட்டுத் தோட்ட ஊக்குவிப்பை சமுர்தி-கிராம சேவையாளரிடம் மட்டும் விட்டு விடல் வெற்றியைத் தராது.

(7) பாடசாலை மாணவர்க்கான வீட்டுத் தோட்டப் பயிற்சியும் ஊக்குவிப்பும்.

குறிப்பு:

மக்களின் மேம்பாட்டில் பல்விதத் திட்டங் களும் அடங்குகின்றன-ஒருங்கிணைகின் றன. சூசூஆனால் வரும் நாட்களைக் கருத் தில் கொள்ளும்போது எல்லாவற்றையும் விட விவசாயத்துறைக்கே பாரிய சவால் உள்ளது -முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் " பசி வந்திட பத்தும் பறந்து போம்"
சூ× விவசாயத் திட்டத்தில் உடனடி ஃநீண்ட காலத் தீர்வு இரண்டுமே உள்ளன. இந்த நிலையில் எதிர்வுகூறப்படும் சவால்களுக் கு முகம் கொடுக்க போர்க்கால அடிப்படையிலான உடனடி நடவடிக்கை காலத்தின் கட்டாயமாகிறது.
சூ×இவற்றில் சில மாகாண அமைச்சுக்கும் அப்பாற்பட்ட விடயங்களே. எனினும் மத்திய அரசிடம் அதனை வற்புறுத்த வேண்டிய கடமை எமது கிழக்கு மாகாண அமைச்சுக்கு உள்ளது.

முக்கிய குறிப்பு:

புவி வெப்பமடைதல் -காலநிலை மாற்றம்
உணவு பிரச்சினை சகல நாடுகளுக்கும் பொருந்தும் எனில் எதிர்காலத்தில் உணவுப் பொருள் உதவியோ அன்றி இறக்குமதியோ சாத்தியம் ஆகாது என்பதையும் மனதில் இருத்தி செயற்படு வோம்!
Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger