ஏறாவுர்பற்று – கல்விக் கோட்ட தைப்பொங்கல் கலாசார விழா

(லியோன்)

ஏறாவுர்பற்று – 01 கல்விக் கோட்டத்தின்  தைப்பொங்கல் கலாசார விழா மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில்  நடைபெற்றது .



தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரணையில் மதரீதியாகவும் கலாசார ரீதுயாகவும் ஒன்றிணைந்து கொண்டாடும் தைப்பொங்கல் விழா இன்று (30) மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா  வித்தியாலயத்தில்   நடைபெற்றது .

ஏறாவுர்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் எம் .பாலசுப்பிரமணியம் தலைமையில்  நடைபெற்ற இந்த பொங்கல் விழா நிகழ்வில்  பிரதம விருந்தினராக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன்  கலந்துகொண்டு ஏறாவுர்பற்று கல்விக் கோட்டத்திற்கான   தைப்பொங்கல் கலாசார விழா வினை ஆரம்பித்து வைத்தார்    

நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்வில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ . சுகுமாரன் ,ஏறாவூர் பற்று  கல்விக் கோட்டத்திற்குட்பட்ட  பாடசாலைகளின் அதிபர்கள்,  ஆசிரியர்கள், மாணவர்கள்  ,சகோதர பாடசாலைகளான முஸ்லிம் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் மகா ஓயா கல்வி வலயத்தின் பெதிரெக்க வித்தியாலய ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்துகொண்டனர் 

இதன் போது தமிழர் பண்பாட்டு விழுமிங்களையும் சகோதர இன கலாசார பண்பாடுகளையும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் அறிந்து கொள்ளும் வகையில் பாரம்பரியங்களை பறைசாற்றும் கலாசார நிகழ்வுகளும் அலங்காரங்களும்   இந்த பொங்கல் விழா நிகழ்வில் இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது .