ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கான வகுப்பறை தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு வகுப்பறை தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பாடசாலையில் நடைபெற்றது 


மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நிலவுகின்ற  வகுப்பறை தளபாடங்களின்  பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில்  வித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பாடசாலைக்கான வகுப்பறை தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன .

மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய ஆசிரியரும் ,மட்டக்களப்பு  கொத்துக்குளத்து  ஸ்ரீ முத்துமாரியம்மன ஆலய இணைச்செயலாளருமான எஸ் .தயாளன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கொத்துக்குளத்து ஸ்ரீ முத்துமாரியம்மன ஆலய  பரிபாலன சபையினால் மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு ஒரு வகுப்பறைக்கான  மாணவ தளபாடங்கள் வழங்கும்  நிகழ்வு (27) இன்று வித்தியாலயத்தில்  நடைபெற்றது  .

இதேவேளை ஆலய முன்னாள் தலைவர் எஸ் .குருகுலசிங்கத்தினால் பாடசாலைக்கான வில்பரோ உபகரணமும் வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு  கொத்துக்குளத்து ஸ்ரீ முத்துமாரியம்மன ஆலய பிரதம குருக்கள் பிரம்மஸ்ரீ  சேக்கிழார் ,ஆலய பரிபாலன சபை தலைவர் எஸ் ருவிக்கரன் , ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் ,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள்  கலந்துகொண்டனர் .