மட்டக்களப்பு விவேகானந்தமகளிர் மகாவித்தியாலயம் உயர்தரபரீட்சையில் வரலாற்றுச் சாதனை

மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தமகளிர் மகாவித்தியாலயம் 2016 க.பொ.த (உஃத) பரீட்சைபெறுபேறுகளின் படி 31 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லஉள்ளனர்.

இவர்களில் 3 மாணவிகள் மருத்துவத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இக் கல்லூரியில் 106 வருடவரலாற்றில் இவ்வருடமே 03 மாணவர்கள் மருத்துவத் துறைக்குசெல்வது குறிப்பிடத்தக்கதாகும். செல்வி.சிவரஞ்சன் சிவாஞ்சலி (மாவட்டநிலை 03),செல்வி.மயில்வாகனம் பிரியங்கரி (மாவட்டநிலை 09), இராஜபாரதிசஞ்சிதா (மாவட்டநிலை 28)அதில் சிவாஞ்சலி அதிவிசேடசிறப்பாகத் தெரிவாகிஉள்ளமைகுறிப்பிடத்தக்கது.

இதனைவிடபௌதிகஉயிரியல் விஞ்ஞானப் பிரிவில் 09மாணவிகளும் ,வர்த்தகப்பிரிவில் 06 மாணவிகளும் கலைப்பிரிவில் 13 மாணவிகளும் பல்கலைக்கழகம் செல்லஉள்ளனர். இம் மாணவிகளையும் கற்பித்த ஆசிரியர்களையும் அதிபர் திருமதிதிலகவதி ஹரிதாஸ் அவர்களும் ,பிரதிஅதிபர்களும்,ஆசிரியர்களும்,பாடசாலைஅபிவிருத்திக் குழுவினரும் ,பழையமாணவர் மன்றத்தினரும்,நலன்விரும்பிகளும் ,ஊர்மக்களும் பாராட்டுகின்றனர்.