இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்களை உத்தரவாதப்படுத்தும் புதிய தொழிற்பயிற்சி நெறிகள் ஆரம்பம்.



(சசி துறையூர்)  இளைஞர்கள் இன்றைய கால சூழ்நிலையில் தொழில் கல்வி ஒன்றினை கற்றுக்கொள்வது மிக மிக அவசியமாகின்றது. இளைஞர் யுவதிகளே உங்கள் வாழ்க்கையை வெற்றிகொள்ள இதோ அரிய வாய்ப்பு.

தொழில் வாய்ப்புக்களை நிச்சயமாக  உத்தரவாதப்படுத்தும், அல்லது பெற்றுக்கொடுப்பதற்குரிய ஏற்ற புதிய தொழிற்பயிற்சி நெறிகள் பல மட்டக்களப்பு சர்வோதயம் பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல்  ஆரம்பிக்கப்படவுள்ளது. எனவே தொழிற்பயிற்சி நெறிகளை தொடரவிரும்பும் மாணவர்கள் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பயிற்சி நெறிகள்.
01. மோட்டார் வாகனம் திருத்துனர் பயிற்சி நெறிகள்.
 (வேன், முச்சக்கரவண்டி  மற்றும், மோட்டார்பைக்)

02. கட்டுமானத்துறை பயிற்சி நெறிகள்.
 (மேசன்,  தச்சன், தொழினுட்ப உத்தியோகஸ்த உதவியாளர்)

03.விருந்தோம்பல் மற்றம் சுற்றுலா பயிற்சி நெறிகள்.
(வரவேற்பாளர், அறைப்பராமரிப்பாளர், உணவு பரிமாறுபவர்)

04.தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல் பயிற்சி நெறிகள்.(கணிணி)

தேசிய தொழிற் தகமை மட்டம் 3 (NVQ level -3) சான்றிதழை பெற்றுக் கொள்ளக்கூடிய ஆறு மற்றும் மூன்று மாத காலங்கள் கொண்டதாக இந்த பயிற்சி நெறிகள் அமைகின்றன.

பிளான் சர்வதேசம் (Plan international) ,வூஸ்க் சிறிலங்கா (Wusc srilanka) ஆகிய நிறுவனங்களின் அனுசரனையுடன் நடைபெறும் இப்பயிற்சி நெறிகளின் போது பயிலுனர்களுக்கு  போக்குவரத்து,
தங்குமிடம், சீருடைவசதிகள் என்பன இலவசமாக பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அறிவீக்கப்படுகிறது.

பயிற்சி நெறிகளை தொடர விரும்பும் மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை 24.01.2017 தொடக்கம் பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும்
அதே வேளை இன்று செவ்வாய்க்கிழமை (24.01.2017) காலை 10.00மணியளவில் சர்வோதயம் பயிற்சி நிலையத்தில் அலுமினியம் பொருத்துனர் மற்றும் மோட்டார் வாகனம் திருத்துனர் பயிற்சிகளுக்கு பயிலுனர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வும் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புகளுக்கு

P.வேல்நாயகம்,
தொழிற்பயிற்சி இணைப்பாளர்,
சர்வோதயம் மட்டக்களப்பு.