கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு

(லியோன்)

நாடளாவிய ரீதியாக முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வுகள் இடம்பெற்ற வருகின்றன.


இதற்கு அமைய  மட்டக்களப்பு மாவட்டத்தில்  பாடசாலைகளுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்க்கும் நிகழ்வுகள்  11.01.2016 புதன்கிழமை இடம்பெற்றது..

இதன் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு கல்வி கோட்டத்தின்   மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்திற்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும்   நிகழ்வு வித்தியாலய அதிபர் ஆர் .இராசு தலைமையில்  நடைபெற்றது  .

நிகழ்வில் தரம் 02 மாணவர்கள்  முதலாம் தரத்திற்கு  வருகை தந்த புதிய மாணவர்களை மலர் மாலை அணிவித்து வரவேற்றதுடன் மாணவர்களின்  வரவேற்பு கலை நிகழ்வுகளும் ,மாணவர்களுக்கான கழுத்து பட்டி அணிவிக்கும் நிகழ்வும் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது  .

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் ,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்  எஸ் .ஜெயகுமார் , கல்லடி வேலூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய பிரதம குரு ஜி ,வி .கதிரேசு சமூக மேம்பாட்டு கழக  தலைவர் என் .நகுலன் , சமுர்த்தி உத்தியோகத்தர்  திருமதி .யுனிட்டா மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள்  கலந்துகொண்டனர் .