கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைகழகத்தில் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்றைய தினம்  மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கான விடுதி வசதிகளை பல்கலைகழக நிருவாகம் மறுத்து வருதைக் கண்டித்ததுடன் இதன்போது பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பல்கலைகழகத்திலுள்ள பொலிஸ் நிலையத்தை அகற்ற வேண்டும், மாணவர்களின் வேசரி பிரச்சினையை உடன் தீர்வைப் பெற்றுதரவேண்டும், உபவேந்தர், அரசின் கைப் பொம்மையா?. சீ.சீ.ரி. கமரா அகற்றப்பட வேண்டும்,

புலனாய்வாளர்கள் பல்கலைகத்தினுள் நுழைந்து மாணவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும், மாணவர்கள் விடுதலைப் புலிகளோ, பயங்கரவாத அமைப்போ அல்ல போன்ற கோசங்களை இதன்போது முன்வைத்தனர்.

பல்கலைகழக நிருவாகம் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று எந்தவொரு முன் நடவடிக்கையும்; எடுக்கப்பட்டவில்லை.

பல்கலைகழக நிருவாகத்தின் நடவடிக்கையில் நம்பிக்கையில்லை. அதனால் குறித்த பிரச்சினை தொடர்பாக எதிர்காலத்தில் பல்கலைகழக மானியம்வரை கொண்டுசெல்வதற்கு முடிவெடுக்கப்பட்டும் எனவும் மாணவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

கிழக்கு பல்கலைகழக வந்தாறுமூலை விடுதி வளாகத்தில் இருந்து ஆரம்பித்த மாணவர்களின் ஆர்ப்பாட்டம் பல்கலையின் நிருவாக கட்டிடம் வரை சென்றதுடன் அங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.