மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாபெரும் இரத்ததான முகாம்

 (லியோன்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு இரண்டு வருட  பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.




மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் இரண்டு வருட பூர்த்தியின்  சிறப்பு  நிகழ்வுகள்  08.01.2016  ஞாயிற்றுக்கிழமை  காலை நடைபெற்றன .


இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை பிரதிநிதித்துவப் படுத்தி மாபெரும் இரத்ததான  முகாம்  08.01.2016 ஞாயிற்றுக்கிழமை  மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது .   

மட்டக்களப்பு   மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  தினேஷ் கருணாநாயக்க தலைமையில்  நடைபெற்ற  இந்த  நிகழ்வில்  கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் , கிழக்குமாகாண சமூக மேம்பாட்டு இணைப்பாளருமான  கே .அரசரட்ணம்,  மட்டக்களப்புஅம்பாறை  பிரதி  பொலிஸ்மா  அதிபர்   டப்ளியு . ஜெ . ஜாகொட மட்டக்களப்பு  மாவட்ட பொலிஸ்  அத்தியட்சகர்   கே .பி . கீர்த்திரத்ன  ,  மத  தலைவர்கள்பொலிஸ்  உத்தியோகத்தர்கள்சிவில் பாதுகாப்பு  குழு உறுப்பினர்கள்   மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் என  பலர்  கலந்துகொண்டனர் .