தமிழ் மொழி கற்கையினை நிறைவு செய்து வெளியேறும் பொலிஸ் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு

  (லியோன்)

மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில்  தமிழ் மொழி கற்கையினை  நிறைவு செய்து வெளியேறும்  பொலிஸ் உத்தியோகத்தர்களை  கௌரவிக்கும்  நிகழ்வு 06.01.2017 வெள்ளிக்கிழமை  மட்டக்களப்பில் நடைபெற்றது.


பிரதம பணிப்பாளரும் ,சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான எஸ் செல்வராஜா வழிகாட்டலின் கீழ் 2016 .08.15 ஆம் திகதி  ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மொழி கற்கை நெறியில்  வடக்கு ,கிழக்கு ,மலையாக  பொலிஸ் நிலையங்களில் சேவையாற்றும்  திறமை வாய்ந்த  பொலிஸ் உத்தியோகத்தர்களில் தெரிவு செய்யப்பட 133 பொலிஸ் உத்தியோகத்தர்கள்   ஐந்து மாத தமிழ் மொழி பயிற்சி நெறிக்கு இணைத்துக்கொள்ளப்பட்டனர்

இந்த ஐந்து  மாத காலம் பயிற்சி நெறியில் தமிழ் எழுத்து மற்றும் பேச்சு தமிழ் கற்கையினை  மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின்  வளவாளர்களான பொலிஸ் உத்தியோகத்தர்  எ. டி .எம்  சுபியான் , ஐ .பி .ரோஜ் , செல்வம்நாச்சி, நாகேந்திரராஜா , சிங்கராஜா , சந்தியாகுமாரி , யமுனா லக்சுமி ஆகியோரினால்  பயிற்சிகள் அளிக்கப்பட்டது .

இந்த தமிழ் மொழி கற்கை  நெறியினை நிறைவு செய்து வெளியேறும் 133 பொலிஸ் உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர்  ரஹீம் தலைமையில் 06.01.2017 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் எ. எஸ் .பி . திலின ஹேவா பத்திரன மற்றும் கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரி பொலிஸ் பரிசோதகர்கள் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள், பயிற்சிக் கல்லூரியின் வளவாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டார்