News Update :
Home » » மெர்கண்டைல் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் வருடாந்த ஒன்று கூடல்

மெர்கண்டைல் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் வருடாந்த ஒன்று கூடல்

Penulis : Anthony Leon raj on Sunday, January 29, 2017 | 8:17 AM

(லியோன்)

1970 ஆம் ஆண்டு  தந்தை அம்பலவாணர் அவர்களினால் யாழ்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட மெர்கண்டைல் தனியார் பாதுகாப்பு சேவை  நிறுவனம்  வடக்கு கிழக்கு மாகாணங்களில் மற்றுமல்லாது  தற்போது தெற்கிலும் தனியார்  பாதுகாப்பு சேவையினை விஸ்தரிக்கப்பட்டு  தனியார்  பாதுகாப்பு சேவைகளை   வழங்கி வருகின்றது
.

மெர்கண்டைல் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனத்தின்    47 வது வருட நிகழ்வும் இந்த நிறுவனத்தின் ஊடாக  மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச அலுவலகங்கள்  மற்றும் தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பு சேவையினை  வழங்கி வரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வும்  இன்று நடைபெற்றது .

இந்நிகழ்வு மெர்கண்டைல் தனியார் பாதுகாப்பு சேவையின் மட்டக்களப்பு  மாவட்ட பொறுப்பதிகாரி ஜெயசந்திரன் தலைமையில் மட்டக்களப்பு அலுவலக உத்தியோகத்தர் திருமதி  .ஜெயசந்திரனின் ஒழுங்கமைப்பில் இன்று காலை 10.00 மணியளவில் சின்ன உப்போடை பேகர் கலாசார மண்டபத்தில்  நடைபெற்றது .

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்பாணம் நல்லூர் மெர்கண்டைல்  நிறுவனத்தின்  தலைமை காரியாலய பிரதம  பணிப்பாளர்  வி .சுகுமாரன் கலந்துகொண்டார் .

ஆரம்ப நிகழ்வாக  தேசிய மற்றும்  நிறுவன கீதம் இசைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன்  நிகழ்வுகள் ஆரம்பமானது .

நிகழ்வின் போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளின் வினோத விளையாட்டு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டது.

இதேவேளை  மெர்கண்டைல் நிறுவனத்தினால்  2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்பாணத்தில் நடத்தப்பட்ட  விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கும் மெர்கண்டைல் நிறுவனத்தின்  பிரதம  பணிப்பாளரினால்  பரிசில்கள் வழங்கப்பட்டது .

இதனை தொடர்ந்து மதிய விருந்து உபசார நிகழ்வுடன் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு நிறைவுபெற்றது .





















 


Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger