கடந்த ஆட்சியிலே இடம்பெற்ற ஊடக அடக்கு முறைகள் தொடர்ச்சியாக இந்த நல்லாட்சியிலும் நடத்துவருகின்றது .(VIDEO)

(லியோன்) .

கடந்த ஆட்சியிலே இடம்பெற்ற ஊடக அடக்கு முறையும் தொடர்ச்சியான நிகழ்வுகள் இந்த நல்லாட்சியிலும் நடத்துவருவதாக  .மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர்  தெரிவித்தார் .


மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடகவியலாளர்கள்  சந்திப்பு 31.12.2016 சனிக்கிழமை  மாலை மட்டக்களப்பு இணையம் அரச சாரா உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா .கிருஷ்ணகுமார் தலைமையில்  நடைபெற்றது .


நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது .

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றிய  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ் .நிலாந்தன் தெரிவிக்கையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது .

இதற்கு காரணம் மட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த ஆட்சியிலே இடம்பெற்ற ஊடக அடக்கு முறையும் தொடர்ச்சியான நிகழ்வுகள் இந்த நல்லாட்சியிலும் நடத்துவருகின்றது .

இதனை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உலகுக்கும் ,அரசுக்கும் சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்ட காரணத்தினால் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது .

உண்மையில் ஒரு நாட்டினுடைய நான்காவது தூண்  என்று சொல்லப்படுகின்ற இந்த ஊடகத்துறையானது ஒரு நாட்டில் இருக்கின்ற  நீதி ,நிர்வாகம் ,பாதுகாப்பு துறைகளுக்கு வழிகாட்டியாக அந்த துறைகள் விடுகின்ற தவறுகளை சுட்டிக்காட்டி உண்மைகளை வெளிக்கொண்டுவந்து வழிநடத்துகின்ற துறையாகத்தான் இந்த ஊடக துறை இருக்கின்றது .
அவ்வாறான செயல்பாடுகளில் ஊடகவியலாளர்களும் ஈடுபடுகின்ற போது அந்த ஊடகவியலாளர்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு விதமான அச்சுறுத்தல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது .

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் அண்மைக்காலமாக ஊடகவியலாளர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கப்படுவதும் , மறைமுக ரீதியாக பல நிர்வாக அதிகாரிகளினால் அச்சுறுத்தப்படுகின்ற செயல்பாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது . 

இதேபோன்று கடந்த  28.12.2016 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி  மீளாய்வு குழு கூட்டத்திலே ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை .  

மாவட்ட அபிவிருத்தி குழுவிடம் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாமை தொடர்பாக கேட்ட போது அவர்கள் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்தார்கள் .
உண்மையில் ஊடகவியலாளர்கள் மாவட்ட செயலகத்திற்குள் அனுமதிக்க படாத காரணம் இன்னும் சரியாக தெரியவில்லை .
மாவட்ட அபிவிருத்தி கூட்டமானது பொதுமக்களுக்கான அபிவிருத்தியை மையப்படுத்திய விடயம் .
எனவே பொதுமக்களுக்கான அபிவிருத்தி இந்த மாவட்டத்தில் எவ்வாறாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது  என்ற பொறுப்பு ஒவ்வொரு ஊடகவியலாளர்களுக்கும் ,ஊடக  துறைக்கும் சார்ந்த விடயம் .
அதனை மூடி மறைத்து அந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் தான் நடந்த விடயங்களை சொல்லுவோம் என்பது எந்த உண்மை தன்மையையோ , நடு நிலையையோ உறுதி படுத்தாத விடயமாக இருக்கும் .
எனவே அன்று ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாமைக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம் .

இது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட நேரடியான அச்சுறுத்தலாக பார்க்க வேண்டிய நிலையாக இருக்கின்றது .

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த அளவில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற அதே நிகழ்வுகள் இந்த நல்லாட்சியிலும் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டுருக்கின்றது .
அதன் வெளிப்பாடுகள் காரணமாக பல ஊடகவியலாளர்கள்  தங்கள் செயல்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது .

எனவே இனி வரும் காலங்களில் ஊடக அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் .

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த ஊடக களத்தினை ,ஊடக சூழலை உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது .

ஏனென்றால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஊழல்கள் ,உண்மைகள் ,அநீதிகள்  வெளிவருவது மிகவும் குறைவாக இருக்கின்றது .

எனவே இவ்வாறான செயல்பாடுகளை வெளியில் கொண்டு வருவதற்கு தொடர்ச்சியாக போராட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது .
இதன் ஆரம்ப நிலையாக தான் இந்த ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர்  தெரிவித்தார் .





இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில்  மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வி .கிருஷ்ணகுமார் ,மற்றும் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர் எஸ் .வரதராஜன் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சார்பில் குறித்த விடயம் தொடர்பாக தமது  கண்டனத்தை தெரிவித்துக்கொண்டனர்  


இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மாவட்ட  ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்