News Update :
Home » » 2017 புதிய வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரியில்.

2017 புதிய வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரியில்.

Penulis : சசி துறையூர் on Monday, January 9, 2017 | 11:04 PM

(சசி துறையூர்) 2017 ம் வருடத்தின் நான்காவது இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது  அமர்வு எதிர்வரும் 25,26ம் திகதிகளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  இளைஞர் பாராளுமன்ற அரங்கில் நடைபெறவுள்ளது.

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் இலங்கை இளைஞர்களின் குரலை தேசிய ரீதியில் ஒலிக்கச் செய்யும் இந்த இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடவுள்ளது.

கடந்த வருடம் 18.12.2016 நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


மேலும் நான்காவது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இளைஞர் பாராளுமன்ற செயற்பாடுகள், அதன் நடைமுறைகள், தொடர்பாகவும்,  இளைஞர் பாராளுமன்ற சம்பிரதாயம் கோட்பாடுகள் உறுப்பினர்களுக்கான வகிபாகம் விழுமியங்கள் தொடர்பான பயிற்சி மற்றும் அறிவூட்டல் செயலமர்வு இம் மாதம் 16,17,18 ஆகிய திகதிகளில் அவிசாவளை பணாவல வீதியில் அமைந்துள்ள பட்டங்கல இளைஞர் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger