மட்டக்களப்பு பெரியஉப்போடை லூர்த்து அன்னையின் ஆலயத்தில் விசேட நத்தார் திருப்பலி பூஜை

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தேவாலயங்களில் இன்று நள்ளிரவு பாலன் பிறப்பு ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பழமையான தேவாலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு பெரியஉப்போடை லூர்து அன்னையின் ஆலயத்தில் விசேட நத்தார் திருப்பலி பூஜைகள் நடைபெற்றன.

ஆலயத்தின் பங்குத்தந்தை நவரெட்னம் அடிகளார் தலைமையில் பாலன் பிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெற்றன.

இதன்போது மறைக்கல்வி நிலைய மாணவர்களின் கரோல் கீதம் இசைக்கும் நிகழ்வுகளம் நடைபெற்று இந்த விசேட திருப்பலி பூஜைகள் நடைபெற்றன.

நத்தார் பண்டிகையின்போது நடாத்தப்பட்ட இந்த திருப்பலியின்போது நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் நல்லாசி வேண்டி வழிபாடுகள் நடாத்தப்பட்டதுடன் இலங்கையில் நீடித்த சமாதானம் வேண்டியும் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் பெருந்திரளான கிறிதஸ்தவ மக்களும் கலந்துகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டனர்.