துறைநீலாவனையில் பொலிஸாரின் முயற்சியினால் அமைக்கப்பட்ட வீடு கையளிக்கும் நிகழ்வு

அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கைவிட்டபோதிலும் பொலிஸார் கைவிடவில்லை.வறிய குடும்பத்தலைவனை இழந்த பெண் ஒருவருக்கு பொலிஸாரின் முயற்சியினால் வீடு ஒன்றுஅமைக்கப்பட்டுவழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவனையில் பொலிஸாரினால் அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்;தரவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வறுமை நிலையில் உள்ள குடும்பத்த்pற்கு இந்த வீடு அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டை வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்;க்கிழமை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு ஏ சனத் நந்தலால தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஜயக்கொட ஆராய்ச்சி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சுமார் 08இலட்சத்து 50ஆயிரம் ரூபா செலவில் இந்த வீடு அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

மிகவும் வறுமை நிலையில் மூன்று பிள்ளைகளுடன் ஓலைக்குடிசையில் மூன்று பிள்ளைகளுடன் வாழ்;ந்துவரும் கணவனை இழந்த பெண்ணுக்கே இந்த வீடு வழங்கப்பட்டுள்ளது.

சுpறிய ஓலைக்குடிசையில் வயதுபோன தாயுடனும் மூன்று பிள்ளைகளுடன் மிகவும் கஸ்டமான நிலையில் வசித்துவந்த பெண் தலைமை தாங்கம் குடும்பத்திற்கே இந்த வீடு வழங்கப்பட்டுள்ளது.

தமது அரசியல்வாதிகள் தமது நிலையை உணர்ந்து எதுவித உதவியும் செய்யாத நிலையில் பொலிஸார் தாமாக முன்வந்து இந்த வீட்டினை அமைத்துதந்தது மகிழ்ச்சியளிப்பதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

ஆலயம் அமைப்பதற்கும் கும்பாபிசேகத்திற்கும் இலட்சக்கணக்கான பணத்தினை செலவுசெய்யும் நம்மவர்கள் இவ்வாறான நிகழ்வுகளை செய்யும்போது சமூகம் முன்னேற்றமடையும் என புத்துஜீவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.