மாமாங்கம் பிள்ளையார் ஆலய சித்திர சிற்ப பெருந்தேருக்காகன அச்சுபார் மற்றும் சில்லு பொருத்தும் நிகழ்வு

(லியோன்)

 மட்டக்களப்பு மாமாங்கம் பிள்ளையார் பேராலயத்தில் நிருமாணிக்கப்படுகின்ற சித்திர சிற்ப பெருந்தேருக்காகன அச்சுபார் மற்றும் சில்லு பொருத்தும்  விசேட பூஜை நிகழ்வு இன்று நடைபெற்றது . 


இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்க பிள்ளையார் பேராலயத்தில்  நிருமாணிக்கப்படுகின்ற 37.9 அடி உயரமுடைய சித்திர சிற்ப பெருந்தேருக்கான அச்சுபார் மற்றும்  சில்லு பொருத்துவதற்கான விசேட பூஜை நிகழ்வுகள் ஆலய பிரதம குரு சிவப்பிரம்மஸ்ரீ ரங்க வரதராஜ சிவாச்சாரியார் தலைமையில் 14.12.2016  இன்று புதன்கிழமை காலை சுபவேளையில்  நடைபெற்றது . 

இந்த நிகழ்வில் ஆலய வண்ணக்கர்மார்கள் , ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்

இந்த சிற்ப பெருந்தேரானது யாழ்பாணம் புத்தூர் ஸ்ரீ காளிகா சிற்பாலய ஸ்தபதி ரதகலா ஞானி செல்லையா பாலசந்திரன் சிற்ப ஆச்சாரியாரினால்  வடிவமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.