களுவாஞ்சிகுடியில் முன்பள்ளி ஆசிரியர்களின் வினைத்திறன் கண்காட்சி

கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் கிழக்கு மாகாண பாலர்பாடசாலை பணியகமும் இணைந்து நடாத்திய முன்பள்ளி ஆசிரியர்களின் வினைத்திறன் கண்காட்சி களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது.

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாலர் பாடசாலையில் உள்ள ஆசிரியர்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் வினைத்திறன் காட்சியே நடைபெற்றது.

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் பட்டிருப்பு வலய வெளிக்கள உத்தியோகத்தர் சா.பரணீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,ஞா.கிருஸ்ணபிள்ளை,மா.நடராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கௌரவ அதிதியாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் மு.கோபாலரட்னம், கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் கல்குடா வலய வெள்ளிக்கள உத்தியோகத்தர் திருமதி கயல் வினோதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கண்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு வேலைப்பாடுகளைக்கொண்ட கண்காட்சி கூடம் திறந்துவைக்கப்பட்டது.

அத்துடன் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கும் மண்டபத்தில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இதன்போது சிறப்பாக சேவையாற்றிய முன்பள்ளி ஆசிரியர்கள்,ஓய்வுபெற்றுச்செல்லும் முன்பள்ளி ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த கண்காட்சி நிகழ்வின்போது மழலைகளின் கண்களையும் மனதையும் கவரும் வகையிலான பல்வேறு கலை நிகழ்வுகளும் இதன்போது நடைபெற்றது.