குழந்தைகளை என்னிடம் அனுப்புங்கள் என்று கூறியது இன்று குழந்தைகள் மீதான வன்முறைகளை பார்கின்ற நிலைமை ஏற்படும் என்பதினாலோ தெரியவில்லை

(லியோன்)

குழந்தைகளை என்னிடம் அனுப்புங்கள் என்று இன்று நடக்கின்ற குழந்தைகள் மீதான வன்முறைகளை பார்கின்ற நிலைமை ஏற்படும் என்பதற்காக தான் அன்று  பாலன் இயேசு கிறிஸ்து குழந்தைகளை என்னிடம் அனுப்புங்கள் என்று கூறினாரோ தெரியவில்லை என ஒளிவிழா  நிகழ்வில் பிரதம விருந்தினராக  கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதேச செயலாளர் வி .தவராஜா இவ்வாறு தெரவித்தார்.

மட்டக்களப்பு  மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட  ஜெயந்திபுரம்  சனிமவுன்ட் விளையாட்டுக்கழகத்தின்  வருடாந்த ஒளிவிழா  18.12.2016 ஞாயிற்றுக்கிழமை  மாலை மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பெற்றோலிய கூட்டுத்தாபன விடுதி மைதானத்தில்  நடைபெற்றது .

இந்த ஒளிவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக  கலந்துகொண்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா உரையாற்றுகையில் இவ்வாறு தெரவித்தார்.

 இன்று இளைஞர்  சமுதாயம் சமுதாயத்தின்பால் தங்களது கவணத்தை செலுத்துகின்ற ஒரு காலமாக மாறிக்கொண்டு வருகின்றது.

தற்போது  இளைஞர் சமுதாயம் இந்த சமுதாயத்தை விட்டு பிழையான வழியில் கொண்டு சென்றிருக்க இன்னும் ஒரு தொகையினர் சமுதாயத்தின்பால் ஈர்ப்பு கொண்டு சமுதாய அபிவிருத்தியிலே ,அந்த பகுதியின் கல்வி அபிவிருத்தியிலே ,ஏனைய பொருளாதார அபிவிருத்தியிலே தங்களை ஈடுபடுத்தி செயல்பட்டு கொண்டு வருவது அந்த  பிரதேசத்திற்கு கிடைத்த ஒரு நல்ல நிலையாகும் .

அந்த வகையில் இந்த விளையாட்டுக்கழகம்  ஒளிவிழாவை வெறுமனே நடத்தி விடாமல் இந்த பகுதியில் வறுமை கோட்டின்கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி உள்ளனர் .

இத்தகைய செயற்பாடு தொடர வேண்டும் இந்த விளையாட்டுக்கழகம் விளையாட்டையும் இணைத்துக்கொண்டு சமுதாயத்தின்பால் தங்களுடைய அக்கறையை செலுத்தியுள்ளது .

இவ்வாரான  செயல்திட்டங்களை விஸ்தரிக்கின்ற பொழுதுதான் விளையாட்டின் ஊடாகவும் இந்த சமுதாயத்தை அபிவிருத்தி செய்ய முடியும் .

அதேபோன்று விளையாட்டுக்கழகங்கள் விளையாட்டு துறையின் ஊடாக கிராமத்தினை விருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் .

மண்முனை வடக்கு பிரதேச செயலகம்  மாகாண, மாவட்ட ,தேசிய ரீதியில் விளையாட்டு வீரர்களை கொண்ட பிரதேச செயலகமாக திகழ்ந்துகொண்டிருக்கின்றது .

இதுபோன்று இந்த பிரதேசத்தில் கல்வியிலும்  கவணம் செலுத்த வேண்டும் . அநேகமான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் கல்வியில்  இன்னும் ஒருவருடைய பொறுப்பாக தான் கருதிக்கொண்டு இருக்கின்றார்கள் .

இவ்வாறான நிலையில் இல்லாமல் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் ஒவ்வொரு அசைவிலும் கவணம் செலுத்தவேண்டும் .

பெற்றோர்கள் குழந்தைகளை  அன்பாக  நேசிக்க வேண்டும் , இதை தான் இயேசு நாதரும் கூறியிருக்கின்றார் .

குழந்தைகளை என்னிடம் அனுப்புங்கள் என்று , இன்று நடக்கின்ற குழந்தைகள் மீதான வன்முறைகளை பார்கின்ற நிலைமை ஏற்படும் என்பதற்காக தான் அன்று இந்த பாலன் இயேசு கிறிஸ்து குழந்தைகளை என்னிடம் அனுப்புங்கள் என்று கூறினாரோ தெரியவில்லை .

ஆகவே உங்களுடைய குழைந்தைகளின் பாதுகாப்பு , கல்வி வளர்ச்சி போன்ற அனைத்து துறைகளும் பெற்றோர்களின்   கையில் இருக்கின்றது .
எனவே குழந்தை செல்வங்களை நாட்டுக்கு நல்ல பிரஜைகளாக வழங்க பெற்றோர்கள் கவணம் செலுத்த வேண்டும்  கேட்டுக்கொண்டார்