நான்காவது தேசிய இளைஞர் பாராளுமன்ற தேர்தல்

(லியோன் )

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம்  தேசிய  கொள்கை திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி  அமைச்சின் ஏற்பாட்டில் 2017 - 2018 ஆண்டுக்கான  நான்காவது  இளைஞர் பாராளுமன்ற வாக்கெடுப்புக்கள்      18.12.2016  ஞாயிற்றுக்கிழமை  நாடளாவிய ரீதியில் நடைபெற்றது
  

நடாளாவிய ரீதீயில்  235 உறுப்பினர்களை தெரிவு செய்ய  670 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டு    வாக்களிப்புகள் இடம்பெற்றன  

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 3 உறுப்பினர்களை தெரிவு செய்ய 45 வேட்பாளர்கள் போட்டியிட்டதோடு  மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 15996  இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி  பெற்றிந்தனர்

மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஒருவரை  தெரிவு செய்ய  14 வேட்பாளர்கள் போட்டியிட்டதோடு     மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில்  6185  இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிந்தனர்

இதற்கு அமைய மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கான  வாக்களிப்புகள்   மட்டக்களப்பு  ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள  வாக்களிப்பு நிலையத்தில்  நடைபெற்றது    .

இதற்கு அமைய தேர்தல் கடமையில்  பிரதான கண்காணிப்பாளராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  வி .தவராசா  மற்றும் அவருடன் இணைந்ததாக கண்காணிப்பு கடமையில்  மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எஸ் . யோகராஜா ,  மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம சேவைகள் நிர்வாக  தலைவர்  எஸ் . தில்லைநாதன் ,தேசிய  இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம் .என் .எம் .நைரூஸ்  ,மண்முனை வடக்கு பிரதேச செயலக இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர் திருமதி .பிரசாந்தி பிரியதர்சன், மட்டக்களப்பு பொலிஸ் நிலைய  பொலிஸ் உத்தியோகத்தர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர் .