பாலியல் சம்பவம் ஒன்றின் ஆதாரங்களை பாதுகாத்தல் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு

(லியோன்)

பாலியல் சம்பவம் ஒன்றின் ஆதாரங்களை பாதுகாத்தல் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 23.12.2016 வெள்ளிக்கிழமை  நடைபெற்றது
 .

கிழக்கிலங்கை சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜாவின் வழிகாட்டலின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி . சந்திரவாணி மனோகரன் தலைமையில் பாலியல் சம்பவம் ஒன்றின் போதான ஆதாரங்களை பாதுகாத்தல் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .

தற்போது அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் , பாலியல் துஸ்பிரயோகம் , குடும்ப வன்முறைகள் , சிறுவர் துஸ்பிரயோகங்கள் , இளம்வயது திருமணம் ,போன்ற சமூக சட்ட விரோத செயல்பாடுகளை  எவ்வாறு தடுத்தல் ,  குறித்த சம்பவங்களுக்கான ஆதாரங்கள் மற்றும் தகவல்களை எவ்வாறு பெற்றுகொள்ளல் .பெற்றுக்கொண்ட ஆதாரங்கள் மற்றும் தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவது  போன்ற பல்வேறு விடயங்கள் இந்த பயிற்சி கருத்தரங்கில் கலந்துரையாடப்பட்டது ..


இந்த பயிற்சி  கலந்துரையாடலில்  கிழக்கிலங்கை சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி சங்க உத்தியோகத்தர்கள் , மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட கிராமமட்ட பெண்கள் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , பெண்கள் ,சிறுவர் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்