களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தேசிய ரீதியில் இரண்டாம் இடம்.

(சசி துறையூர்) 

உற்பத்தி திறன் 2015 வருடத்திற்க்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று இரத்மலானை Stein studios அரங்கில்   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் பங்கு பற்றலுடன் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தேசிய ரீதியில் இரண்டாவது வைத்தியசாலையாக தெரிவு செய்யப்பட்டமைக்கான விருது வழங்கி கொரவிக்கப்பட்டது. விருதினை வைத்தியஅத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் பெற்றுக்கொண்டார். 

இந்த நிகழ்வில் பொது நிர்வாக அமைச்சர் மத்தும பண்டார, அமைச்சர்களான நிமால் சிறிபாலடிசில்வா, எ.எச்.எம் பெளசி கிழக்கு மாகாண அமைச்சர் ஆரியவதி ஆகியோர் கலந்து கொண்டனர். 

பொது நிர்வாக அமைச்சு ஆண்டுதேறும் உற்பத்தி திறனில் மேன்மையுடன் சிறந்த சேவையை மக்களுக்கு வழங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கிடையில் தேசிய ரீதியில் போட்டிகளை நாடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில் போட்டியில் தலைமைத்துவம் சேவைகளின் தரம் பாதுகாப்பு நடவடிக்கைகளின் வினைத்திறன் பாவனையாளர்களின் திருப்தி என்பவற்றை அடிப்படையாக கொண்டு அமைச்சினால் நடாத்தப்பட்ட தரப்படுத்தலிலே  களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை இரண்டாம் இடம் பெற்றமை பெரும் வரவேற்புக்குரிய விடயம். 

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை கடந்த மூன்று வருடங்களாக தொடர்ச்சியாக தேசிய ரீதியில் வெற்றியடைந்து தடம்பதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்துக்கு பொருமை சேர்க்கும் இந்த வெற்றியை பெறுவதற்க்காக வழிகாட்டியாக செயற்பாட்ட வைத்திய அத்தியட்சகர் மற்றும் உத்தியோகஸ்தர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.