பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் 9வது கழக தினம் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக சேவையுடன் அர்ப்பணித்த விளையாட்டுத்துறைக்கு வளர்ச்சிப்போக்கினைக்கொண்டுள்ள பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் 09வது கழக தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் பெரியகல்லாறு கலாசார மண்டபத்தில் கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஏ.அகிலன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதில் சிறப்பு அதிதிகளாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளார் மு.கோபாலரட்னம்,வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.வாமதேவன் உட்பட பலர் கலந்து சிறப்பிக்கின்றனர்.

களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் பல்வேறு சமூக சேவைகளை மேற்கொண்டுவரும் கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் விளையாட்டுத்துறையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனக்கென தனியிடத்தைக்கொண்டுள்ளது.

கல்வி வளர்ச்சிக்கான உதவிகள் வழங்குதல்,வறுமையானவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி வழங்குதல்,பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கான உதவி என பல்வேறு உதவிகளை கடந்த ஒன்பது வருடாக இந்த விளையாட்டுக்கழகம் வழங்கிவருவதுடன் கடந்த நான்கு வருடமாக இரத்ததானமும் இந்த கழகம் செய்துவருகின்றது.

சிறந்த தலைமைத்துவம் காரணமாக கட்டுக்கோப்புடன் செயற்பட்டுவரும் கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் முயற்சியினால் பெரியகல்லாறு பொதுமயானத்தில் நினைவுமண்டபம் அமைக்கப்பட்டுள்ளதுடன் நீண்ட பரப்பினைக்கொண்ட அந்த மயானத்தை சுற்றி மதில் அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

ஒன்பது வருடங்களை சிறப்பான முறையில் கடந்துவந்துள்ள கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் இந்த கழக தினத்தின்போது இப்பகுதியில் பல்வேறு சாதனைகளைப்படைத்தவர்கள் கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.