மட்டக்களப்பில் 30 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டும் நிகழ்வு

கிழக்கு மாகாணத்தில் உயரமான கிறிஸ்மஸ் மரம் மட்டக்களப்பில் நேற்று புதன்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு பார்வீதி புளியடிக்குடா புனித லூர்து அன்னை ஆலயத்தின் ஒளிவிழாவும் கிறிஸ்மஸ் மரம் திறப்பு விழாவும் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி லோகநாதன் அடிகளாரின் வழிகாட்டலின் கீழ் மோசஸ் மற்றும் ஜோர்ஜ் ஆகியோரின் நெறிப்படுத்தலின் கீழ் 30அடி உயிரம் கொண்ட இந்த கிஸ்மஸ்மரம் ஒளியூட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

முதன்முறையாக இளைஞர்யுவதிகள் ஒன்றியத்தின் உழைப்பினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்மஸ் மரத்தை அருட்தந்தை நவரெட்னம் கலந்தகொண்டு வழிபாடுகளை மேற்கொண்டு திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வினை தொடர்ந்து ஆலயத்தில் ஒளிவிழா நிகழ்வு புளியடிக்குடா புனித லூர்து அன்னை ஆலயத்தின் பங்குமக்களினால் சிறப்பாக நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் அருட்தந்தை கிரிஸ்டி அவுஸ்கோன் மற்றும் அருட்தந்தை நவரெட்னம் அடிகளார் மற்றும் அருட்சகோதரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பாலன் பிறப்பு காட்சியும் காண்பிக்கப்பட்டதுடன் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வின்போது நத்தார் பாப்பா வருகைதந்து ஆடிப்பாடி சிறுவர்கள் மற்றும் அதிதிகளுக்கு பரிசுகளும் வழங்கிவைத்தார்.