சுவாமி விபுலானந்தர் 125வது ஜனன ஆண்டை முன்னிட்டு பல்வேறு போட்டிகள்

சுவாமி விபுலாநந்தரின் 125ஆவது ஜனன ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை கட்டுரை, கவிதைப் போட்டிகளை நடாத்தவுள்ளது.

அகில இலங்கை ரீதியில்; பாடசாலை மட்டத்திலும், பல்கலைக்கழக மட்டத்திலும், திறந்தபோட்டி மட்டத்திலும், மற்றும் சர்வதேச மட்டத்திலும், நடாத்தவுள்ள இப்போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் மேற்படி சபையால் கோரப்பட்டுள்ளது.

01.அகிலஇலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடைபெறும் கட்டுரைப் போட்டி

தலைப்பு:“ஈழத்துகல்வி வளர்ச்சியில் சுவாமி விபுலாநந்தரின் வகிபங்கு”

பொதுநிபந்தனைகள்:தீவகத்தின் எப்பாகத்திலும் தரம் 10 முதல் 13 வரையில் கல்விபயிலும் மாணவர்கள் 750 முதல் 1000 வரையிலானசொற்களைக் கொண்டு, தமது சொந்த ஆக்கமாக அனுப்புதல் வேண்டும் அனுப்பப்படும் ஆக்கங்கள் விண்ணப்பதாரரது சொந்த ஆக்கமாக இருப்பதை குறிப்பிட்ட பொறுப்பாசிரியரும் அதிபரும் உறுதிப்பபடுத்த வேண்டும்.

ஆக்கத்தில் விண்ணப்பதாரியின் பெயர் முகவரி எழுதப்படாது வேறுஒரு தாளில் முழுப்பெயர், பிறந்ததிகதி, பாடசாலையின் பெயர், தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம், அஞ்சல் முகவரி, கற்கும் வகுப்பு ஆகியவிபரங்கள் குறிப்பிடப்பட்டு பொறுப்பாசிரியரும் அதிபரும் உறுதிப்பபடுத்தவேண்டும்.

வேறு ஒருவரின் ஆக்கத்தின் பகுதியையோ அல்லது முழுவதையுமோபெற்று தமது ஆக்கமாக அனுப்பும் ஆக்கங்கள் போட்டியில் இருந்துநிராகரிக்கப்படும்.

பரிசுவிபரம்: சானறிதழுடன் பணப்பரிசும் உண்டு.1ம் பரிசு ரூபா 3000.00 , 2ம் பரிசு ரூபா 2000.00,  3ம் பரிசு ரூபா 1000.00 மற்றும் ஐந்து ஆறுதல் பரிசுகள் ரூபா 500.00 வீதம் வழங்கப்படும்.

02. அகிலஇலங்கை ரீதியில் பல்கலைக்கழக மட்டத்தில் நடைபெறும் கட்டுரைப் போட்டி.

தலைப்பு:-01  “சுவாமி விபுலாநந்தரின் கல்விப்பணிகள்.”
தலைப்பு:-02 “தமிழியல் ஆய்வு வளர்ச்சியில் சுவாமி விபுலாநந்தரின் தடங்கள்”
இரண்டு தலைப்புக்களில் ஏதாவது ஒருதலைப்பை மாத்திரம் தெரிவு செய்து 1750 தொடக்கம் 2000 வரையிலானசொற்களைக் கொண்டு தமது சொந்த ஆக்கமான கட்டுரைகளை அனுப்புதல் வேண்டும்.

பொதுநிபந்தனைகள்:-

சான்றிதழுடன் பணப்பரிசுகளும் வழங்கப்படும்:  1ம் பரிசு ரூபா5000.00, 2ம் பரிசு ரூபா3000.00, 3ம் பரிசு ரூபா2000.00 மற்றும் ரூபா1000.00 வீதம் ஐந்துஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.
தீவகத்தின் யாதாயினுமொரு பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் மாணவர்கள் ஆண், பெண் இரு பாபலாரும் தமது சொந்த ஆக்கங்களை அனுப்புவதனூடாக பங்குபற்றலாம்.

ஆக்கங்கள் ஏ4 தாளில் கையெழுத்தாகவோ தட்டச்சுபதிவிலோ கணினிப் பதிவு முறையிலோ அனுப்பலாம்.

ஆக்கத்தில் விண்ணப்பதாரியின் பெயர் முகவரி எழுதப்படலாகாது. வேறு ஒருதாளில் விண்ணப்பதாரரின் முழுப்பெயர் புனைபெயர் (இருந்தால்) பிறந்ததிகதி அஞ்சல் முகவரி ஃ மின்னஞ்சல் முகவரி,  பல்கலைக்கழகம், தொலைபேசி அல்லது கைபேசி இலக்கம் ஆகிய விடயங்களை மாத்திரம் எழுதி துறைத்தலைவர்  ஊடாக   பீடாதிபதியினால் உறுதிப்படுத்தப்பபட்டு அனுப்பவேண்டும் வேறு ஒருவரின் ஆக்கத்தின் பகுதியையோ அல்லது முழுவதையுமோ பெற்று தமது ஆக்கமாக அனுப்புமிடத்து ஆக்கங்கள் போட்டியில் இருந்து நிராகரிக்கப்படும்.

03. அகிலஇலங்கை ரீதியில் நடைபெறும் திறந்த போட்டிகள்
போட்டி இல: 1 கட்டுரைப்போட்டி

தலைப்பு: “தமிழ் இசைப்; பாரம்பரியங்களை முன் கொண்டு; செல்வதில் யாழ் நூலின் பங்கு”
கட்டுரைகள் 1250 தொடக்கம் 1500 வரையிலானசொற்களைக் கொண்டிருக்கவேண்டும்.

போட்டி இல: 2 கவிதைப்போட்டி

தலைப்பு:“முத்தமிழ்;ப் புலமையின் சொத்தான வித்தகன்”
கவிதைகள் மரபுக்கவிதையாயின் 40 தொடக்கம் 48 வரையிலானவரிகளையும் புதுக்கவிதையாயின் 60 தொடக்கம் 80 வரையிலானவரிகளையும் கொண்டிருக்கவேண்டும்.

பொதுநிபந்தனைகள்:

சான்றிதழுடன் பணப்பரிசுகளும் வழங்கப்படும்:  1ம் பரிசு ரூபா5000.00, 2ம் பரிசு ரூபா3000.00, 3ம் பரிசு ரூபா2000.00 மற்றும் ரூபா1000.00 வீதம் ஐந்துஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.
இலங்கைப் பிரஜைகளாக இலங்கைக்குள் வாழும் 18 வயதுக்குமேற்பட்ட ஆண் பெண் இரு பாபலாரும் தமது சொந்த ஆக்கங்களை அனுப்புவதனூடாக பங்குபற்றலாம்.

ஆக்கங்கள் ஏ4 தாளில் கையெழுத்தாகவோ தட்டச்சுபதிவிலோ கணினிப் பதிவு முறையிலோ அனுப்பலாம்.

ஆக்கத்தில் விண்ணப்பதாரியின் பெயர் முகவரி எழுதப்படலாகாது. வேறு ஒருதாளில் விண்ணப்பதாரரின் முழுப்பெயர் புனைபெயர் (இருந்தால்) பிறந்ததிகதி அஞ்சல் முகவரி ஃ மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி அல்லது கைபேசி இலக்கம் ஆகிய விடயங்களை மாத்திரம் எழுதி கிராமசேவகர் ஊடாக அவ்வப் பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்தப்பபட்டு அனுப்பவேண்டும் வேறு ஒருவரின் ஆக்கத்தின் பகுதியையோ அல்லது முழுவதையுமோ பெற்று தமது ஆக்கமாக அனுப்புமிடத்து ஆக்கங்கள் போட்டியில் இருந்து நிராகரிக்கப்படும்.

04. உலகளாவிய ரீதியில் நடைபெறும் போட்டடிகள் தொடர்பான விபரங்கள்

போட்டி இல: 1  கட்டுரைப்போட்டி

தலைப்பு:“சுவாமி விபுலாநந்தரின் ஆய்வுப்பணியும் அதன் விளைவுகளும்”
கட்டுரைகள் 1250 தொடக்கம் 1500 வரையிலான சொற்களைக் கொண்டிருக்கவேண்டும்.
போட்டி இல: 2 கவிதைப்போட்டி
தலைப்பு:“மெய்ஞ்ஞானத்திலும் விஞ்ஞானம்; கண்ட தமிழ்த்துறவி ”
மரபுக்கவிதையாயின் 40 தொடக்கம் 48 வரையிலானவரிகளையும் புதுக்கவிதையாயின் 60 தொடக்கம் 80 வரையிலானவரிகளையும் கொண்டிருக்கவேண்டும்.

பொதுநிபந்தனைகள்:

சான்றிதழுடன் பணப்பரிசுகளும் வழங்கப்படும்:  1ம் பரிசு ரூபா10000.00, 2ம் பரிசு ரூபா7000.00, 3ம் பரிசு ரூபா5000.00 மற்றும் ரூபா2000.00 வீதம் ஐந்துஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.

இலங்கை தவிர்ந்த ஏனைய நாடுகளில் வாழும் 16 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இரு பாலாரும் தமது சொந்த ஆக்கங்களை ஏ4 தாளில்; கணினி பதிவில் அனுப்புவதனூடாக பங்குபற்றலாம்.

ஆக்கத்தில் விண்ணப்பதாரியின் பெயர் முகவரி எழுதப்படலாகாது. வேறு ஒருதாளில் விண்ணப்பதாரரின் முழுப்பெயர் புனைபெயர் (இருந்தால்) பிறந்ததிகதி அஞ்சல் முகவரி ஃ மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி அல்லது கைபேசி இலக்கம் ஆகிய விடயங்களை மாத்திரம் எழுதி அனுப்பவேண்டும்.

போட்டிகளில் பங்குபற்ற விரும்புவோர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதிக்கு முன்னர் தமது சுய ஆக்கங்களை கீழ்வரும் மின்அஞ்சல் மூலமாகவோ தபாலிலோ அனுப்பலாம். மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை அங்கத்தவர்களோ அவர்களின் குடும்ப உறுப்பினர்களோ பங்குபற்றமுடியாது.

மேலதிக தகவல்களுக்கு திரு.ச.ஜெயராஜா, பொதுச்செயலாளர், சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை, 19 முதலாம் குறுக்கு வீதி, கல்லடி, மட்டக்களப்பு தொலைபேசி 0777249729. தொடர்பு கொள்ளவும்.

ஆக்கங்களை அனுப்பவேண்டிய முகவரி: திருமதி சுபாசக்கரவர்த்தி போட்டி நிகழ்ச்சிக் குழு சுவாமிவிபுலானந்தர் நூற்றாண்டுவிழாச் சபை இல. 45 லேக் வீதி இல.1 மட்டக்களப்பு, இலங்கை மின்அஞ்சல்முகவரி:  swamivipulanantharbatti@gmail.com webside 1 : swamivipulananthar.org and webside 2: swamivipulananthar.com


க.பாஸ்கரன்                                ச.ஜெயராஜா
ஓப்பம்                                       ஒப்பம்
தலைவர்                                 பொதுச்செயலாளர்

மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை