படுகொலைசெய்யப்பட்ட மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 11வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் நத்தார் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 11வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

 மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இதுதொடர்பான நிகழ்வு இன்று பிற்பகல் தமிழரசுக்கட்சி இளைஞர் அணியின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

தமிழரசுக்கட்சி இளைஞர் அணியின் தலைவர் கி.சேயோன் தலைமமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது அன்னாரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன்,மாகாணசபை உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் நத்தார் ஆராதனையின்போதுதமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் 10 வருடங்களுக்கு பின்னர் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேர் சந்கேத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.