ஆன்மீகப்பண்புகளின் மூலம் வீதிப்பாதுகாப்பு மட்டக்களப்பு மாநகர சபை முன்னெடுப்பு

ஆன்மீகப்பண்புகளின் மூலம் வீதிப்பாதுகாப்பு எனும் தொனிப்பொருளிலான செயலமர்வொன்று இன்றைய தினம் காலை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் வீதிப்பாதுகாப்புச் செயற்திட்டத்திற்கென இலங்கையில் அச் செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலையத்தினரால் மட்டக்களப்பு மாநகர சபை வாகனச் சாரதிகள், மற்றும் ஊழியர்களுக்கு இச் செயலமர்வு நடத்தப்பட்டது.

மட்¬டக்¬க¬ளப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில், பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலையத்தின் மாவட்ட இணைபபாளர்களான கேசுரேந்திரன், வி.குணசேகரம், மாநகர சபையின் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சந்திரகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

வீதிப் போக்குவரத்தும் அதன்போது கைக்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகளும், அதற்காக மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்களையும் வீதி விபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பல விடயங்களும் முக்கிய தேவையாக உள்ளன. அந்த வகையில் ஐக்கிய நாடுகள் சபை வீதிப் பாதுகாப்பு தொடர்பிலான செயற்திட்டம் ஒன்றினை உலகம் முழுவதும் ஆரம்பித்துள்ளது.

அத்திட்டத்தினை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான பங்காளியாக பிரம்ம குமாரிகள் ராஜயோக நிலையத்தினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதலாவது செயலமர்வு இன்றைய தினம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.