வீட்டின் கூரையைப் பிரித்து தங்க நகைகள் மற்றும் பணத்தினைக் கொள்ளையிட்ட சம்பவமொன்று வாழைச்சேனைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வியாழக்கிழமை பகல்வேளை விபுலானந்தர் வீதி, வாழைச்சேனையைச் சேர்ந்த சு.கங்கேஸ்வரன் என்பவரது வீட்டில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உரிமையாளர்கள் எவரும் இல்லாதபோது வீட்டின் கூரைப் பகுதியின் ஓட்டினை கழற்றிய திருடன் உள்ளே சென்று அலுமாரியில் இருந்த தங்க நகைகள் மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் போன்றவற்றினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.