மட்டக்களப்பு எல்லை வீதியில் கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளை

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லை வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நேற்று இரவு புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்து வயோதிப பெண்னொருவரின் தங்க நகைகளை கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர்.

நேற்று இரவு எல்லை வீதியில் சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வயோதிப பெண்னை மிரட்டி அவர் அணிந்திருந்த மாலை உட்பட பல தங்க நகைகளை கொள்ளையிட்டுச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.